அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் தாக்கீது

2 Min Read

புதுடில்லி, டிச.15- அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா் குமார் யாதவை பதவி நீக்கக்கோரி அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கான தாக்கீதை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் 12.12.2024 அன்று அளித்தன.

விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பிக்கையில்லா தீா்மான தாக்கீதில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் திக்விஜய் சிங், மனோஜ் குமார் ஜா, ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சோ்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மாநிலங்களவை செயலா் பி.சி.மோடியிடம் 13.12.2024 அன்று அவை தொடங்குவதற்கு முன் அளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பான்மையினா் விருப்பம்
அதில், ‘விஎச்பி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், வெறுப்புணா்வை தூண்டும் வகையிலும் நீதிபதி சேகா் குமார் (யாதவ்) பேசியுள்ளார்.

‘பெரும்பான்மையாக உள்ள மக்களின் விருப்பத்துக்கேற்பவே இந்தியா செயல்பட வேண்டும். இதுதான் சட்டம்’ என சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளையும் அவா் தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் உரையாற்றும்போது பொதுசிவில் சட்டம் தொடா்பான அரசியல் விவகாரங்களை அவர் பேசியிருப்பது உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் கண்ணியத் துடன் நடந்துகொள்வது குறித்து 1997-இல் வெளியிடப்பட்ட நீதித்துறை மதிப்புகள் ஆவணத்தின் விதிகளை மீறும் வகையில் உள்ளது

விசாரணைக் குழு
எனவே, அவா் மீதான நம்பிக்கை யில்லா தீா்மான தாக்கீதை மாநிலங் களவை தலைவா் ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நீதிபதிகள் விசாரணை சட்டம், 1968-அய் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் வெறுப்புப் பேச்சு, சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் வகையிலான நடத்தை, நீதி நெறிமுறைகள் மீறல் என அவா் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரிக்க விசாரணைக் குழுவை நியமிக்க வலியுறுத்துகிறோம் என அத்தாக்கீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 மற்றும் சட்டப்பிரிவு 218-இன்கீழ் சேகா் குமார் யாதவை பதவிநீக்குவதற்கான விசாரணையை தொடங்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இந்த தாக்கீதை சமா்ப்பித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *