வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தொடர்பான வழக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 15– வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு நேற்று (14.12.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1990-களின் துவக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவது தொடா்பான பிரச்சினை தீவிரமாக இருந்தது. ராமன் பிறந்த இடத்தில் இருந்த கோவில் இடிக் கப்பட்டு, அதன் மீது, பாபா் மசூதி கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. இது தொடா்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப் பட்டன. இதையடுத்து, 1991-இல் அறிமுகம் செய்யப்பட்ட வழி பாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி அஸ்வினி குமார் உள்ளிட்டோர் தொடா்ந்த ஆறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்த நிலைப் பாட்டை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991-இன் அரச மைப்புச் சட்டத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் வழக்குகள் அனைத்தையும் கடந்த டிச.12ஆம் தேதி விசாரித்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை நான்கு வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தரப்பில் வழக்குரைஞா் ராம்சங்கா் உச்சநீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனுவை நேற்று (14.12.2024) தாக்கல் செய்துள்ளார். அதில்,‘ வழிபாட்டுத்தலங்கள் சட்டம் – 1991 தொடா்பான வழக்கில் எங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும். அதேபோன்று சட்டத்தின் விதிமீறல்களை சவால் செய்யும் விவகாரத்தில் எங்களது தரப்பில் எழுத்துப்பூா்வ மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத் தைகள் கட்சிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *