சென்னை, டிச. 15– இலங்கையில் சட்டவிரோதமாக தடுத்து வைக் கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.
இலங்கை அதிபர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் அன்று புதுடில்லிக்கு வருகை செய்ய உள்ளார்.
இதனைஅடுத்து மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா ஒன்றிய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவின் மொத்த கடலோர நீளத்தில் 15 சதவீதத்தை உள்ளடக்கிய 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் பரந்த கடற்கரையை எடுத்துரைத்தார்.தனது தொகுதியான மயிலாடுதுறை உட்பட தமிழ்நாட்டின் 38 மாவட் டங்களில் 14 மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
மற்ற கடலோர மாவட்டங்களில் திருவள்ளூர், சென்னை, செங்கல் பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப் பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை அடங்கும்.
இந்த 14 மாவட்டங்களில் மொத்த மாக 2.1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்-தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்-ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன வர்கள் உள்ளனர்.
தேசிய அளவில் மீன்பிடி உற் பத்தியில் தமிழ்நாடு அய்ந்தாவது இடத்தில் உள்ளது. வங்காள விரி குடாவில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தல், தாக்குதல்கள், கைதுகள் மற்றும் கொலைகளை கூட வழக்கமாக சந்திக்கும் தமிழ் நாடு மீனவர்களின் பாதிப்பை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துரைத்தார்.
“கைது நிகழ்வுகள் இலங்கை யாலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது எல்லைக் கோட்டை (IMBL) கடந்து செல்வதே காரணம் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இத்தகைய கூற்றுக்கள் நமது மீனவர்களுக்கு எதிரான தேவையற்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது.
உலகளவில், எல்லையைத் தாண்டும் மீனவர்கள் கண்ணி யத்துடன் நடத்தப்படுகிறார்கள், ஆனால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் பெரும் அவமதிப்பு மற்றும் இன்னலுக்கும் ஆளாகின்றனர். அதனை தடுத்து நிறுத்த இலங்கை அதிபரிடம் எடுத்துக்கூறி ஆவன செய்யுமாறு தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.