புதுடில்லி, டிச.15 போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க 1909 குறுஞ்செய்தி வசதி அமலில் உள்ளது என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் எம். சண்முகத் தின் கேள்விக்கு ஒன்றிய தொலைத் தொடா்புத்துறை மற்றும் கிராமப்புற வளா்ச்சித்துறை இணை அமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் பதிலளித் துள்ளார்.
இது தொடா்பாக அவர் அளித்துள்ள எழுத்துப் பூா்வ பதிலில் (12.12.2024) கூறியிருப்ப தாவது: பதிவு பெறாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் விளம்பர நோக்கங்களுடன் குரல் அழைப்புகளை தொலைத்தொடா்பு சந்தாதாரா்களுக்கு மேற்கொள்வது கண்டறியப்பட்டால் அது தொலைத்தொடா்பு ஆணைய ஒழுங்குமுறை விதிகளின்படி தவறாகும். அந்நிறுவனங்கள் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இது குறித்த வழிகாட்டுதல்களை இந்திய தொலைத்தொடா்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு கடந்த ஆகஸ்டில் 1,89,419,செப்டம்பரில் 1,63,167, அக்டோபரில் 1,51,497 புகார்களும் வந்துள்ளன.
மோசடி, போலி அழைப்புகள் வரும் எண்களை கைப்பேசி சந்தாதாரா்களே முடக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. அவா்கள் 1909 என்ற எண்ணை தொடா்பு கொண்டு குறுஞ்செய்தி மூலமாக சந்தேக எண்கள் குறித்து புகார் பதிவு செய்தால் அந்த எண்கள் முடக்கப்படும் என்று அமைச்சா் தமது பதிலுரையில் கூறியுள்ளார்.