இரட்டை வரிவிதிப்பு விதியின்கீழ் இந்தியாவுக்கு அளித்த மிகவும் விரும்பத்தக்க நாடு தகுதியை சுவிட்சர்லாந்து ரத்து செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நிதித்துறையின் அறிவிப்பில், நெஸ்லே விவகாரத்தில் 2023இல் இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவால் இருதரப்பு வர்த்தகம், முதலீடு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.