புதுடில்லி, டிச.14 மோடி பிரதமர் ஆன பின்பு தன்னாட்சி அரசு நிறுவனமான அமலாக்கத் துறையின் பெயரே அதிகமாக அடிபட்டு வருகிறது. இதற்குக் கார ணம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க, ஒன்றிய அரசுக்கு எதிரான குரல்களை நசுக்க மோடி அரசு அமலாக்கத்துறையை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கருநாடகா, மத்தியப்பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை அமலாக்கத்துறை மூலம் பாஜக கவிழ்த்தது என இன்று வரை குற்றச்சாட்டுகள் உள்ளன.
இரண்டு மாநில முதலமைச்சர்களை…
மகாராட்டிராவில் அமலாக்கத்துறை மூலமாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக இரண்டாக உடைத்ததாக உத்தவ் தாக்கரே வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல மோடி அரசுக்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சிகளை மிரட்டும் நோக்கில் அமலாக்கத்துறை மூலம் எண்ணற்ற கைது நடவடிக்கைகளும் நிகழ்ந்துள்ளன. முன்பு டில்லி, ஜார்க்கண்ட் மாநி லங்களில் ஆட்சியை கவிழ்க்க இரண்டு மாநில முதலமைச்சர்களை (அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன்) சிறையில் அடைத்ததும் அமலாக்கத்துறையே என்பது நாடறிந்த விஷயம் தான்.
மோடி அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது
இந்நிலையில், மோடி அரசு – அம லாக்கத்துறை கூட்டணியின் அடவாடி நாடாளுமன்றத்திலேயே அம்பலமாகி யுள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரந்தீப் சுர்ஜே வாலா அமலாக்கத் துறையின் வழக்குகள் மற்றும் தண்டனைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மோடி அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
அந்த அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் ரந்தீப் சுர்ஜேவாலா பதி விட்டுள்ளார். அந்த பதிவில், “மோடி பிரதமர் ஆன பின்பு கடந்த 10 ஆண்டுகளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் 911 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் வெறும் 42 (4.6 சதவீதம்) வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை!
அதாவது அமலாக்கத்துறையின் தண்டனை விகிதம் 5% அய்த் தாண்டவில்லை. குறிப்பாக வெறும் 257 (28%) வழக்குகள் விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ளன. அதே நேரத்தில் 654 (71.7%) வழக்குகள் கடந்த அய்ந்தாண்டுகளாக நிலுவையில் உள்ளன. அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகளில் 102 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் இந்தச் செயல்பாடு பழிவாங்கும் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.
பகிரப்பட்டு வருகிறது
வழக்குகளின் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசுக்கு எதிரான குரல்களைக் ஒடுக்க அமலாக்கத்துறை எவ்வாறு ஆயுதம் ஏந்தப்பட்டுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரந்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது