கணவனோ, அவரது உறவினர்களோ யாராக இருந்தாலும், திருமணமான பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ கொடுமைக்கு ஆளாக்குவதை இந்த 498ஏ சட்டப்பிரிவு (BNS) 84) கிரிமினல் குற்றமாக வரையறுக்கிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டம் வழி செய்கிறது. ஆண்களை பழிவாங்கவும் இச்சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.