இரு சக்கர வாடகை வண்டிக்கு பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் இரு சக்கர வாடகை வண்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குறிப்பிட்ட அவர், மஞ்சள், வெள்ளை இலக்கத் தகடு கொண்ட வாகனங்களுக்கு வித்தியாசம் உள்ளது என்றார். மேலும், இரு சக்கர வாடகை வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு காப்புறுதி கிடைக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.