மும்பை, டிச. 13- மும்பை கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்களும், மேனாள் அமைச் சர் மு.தென்னவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மும்பை கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் 8.12.2024 ஞாயிறு மாலை 5 மணிக்கு பாண்டூப் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரைட் மேல்நிலைப் பள்ளி கல்வித்தந்தை தேவதாசன் வளாகத்தில் விழா நடைபெற்றது.
முதன்முதலில் அந்த பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது
வடமொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவச் செல்வங்களால் தமிழ்மொழி வாழ்த்துடன் கலைஞர் நூற்றாண்டு நிறைவுவிழா நடைபெற்றது.
கலைஞர் அவர்களின் படத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களும், சமீபத்தில் மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் படத்தை மேனாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்களும், தந்தை பெரியார் அவர்களின் படத்தை திருமதி சுகுணா அன்பழகன் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தை திருமதி ஜஸ்டினா ஜேம்ஸ் அவர்களும்,பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் படத்தை திருமதி விண்ணரசி சேசுராசு அவர்களும், மும்பையில் கழகம் வளர்த்த தளகர்த்தர்களாம் மறைந்த தலைவர்கள் எஸ்.தியாகராசன் அவர்களின் படத்தை திருமதி ஜெலின் ஜேக்கப் அவர்களும், த.மு.ஆரியசங்காரன் அவர்களின் படத்தை திருமதி லட்சுமி மாணிக்கம் அவர்களும், த.மு.பொற்கோ அவர்களின் படத்தை திருமதி.நங்கை குமணராசன் அவர்களும் கல்வித்தந்தை வி.தேவதாசன் அவர்கள் படத்தை திருமதி ஜானகி மாறன் அவர்களும் திறந்து வைத்து மரியாதை செய்தார்கள்.
காலத்தை வென்ற கலைஞர்
அதன்பிறகு “காலத்தை வென்ற கலைஞர்” என்கிற பொதுத் தலைப்பில் கருத்தரங்கத்தை காரைக்குடி கலைஞர் தமிழ்ச் சங்க நிறுவனர் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மும்பை கலைஞர் தமிழ்ச் சங்க புரவலர் பொ.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
“சமூக நீதியின் சமத்துவக் காவலர்” என்கிற தலைப்பில் நாகை மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆரூர் மணிவண்ணன், “சரித்திரம் போற்றும் சாதனை நாயகர்” என்கிற தலைப்பில் மும்பைச் சாரல் இதழின் ஆசிரியர் திருமதி ஜெயதுர்கா ராஜனும், “இணையில்லா இலக்கிய வேந்தர்” என்கிற தலைப்பில் ஞானசேகரன் கல்வி அறக்கட்டளை தென்பாதி சீர்காழி சீ.இராசேந்திரனும், “மானமுள்ள சுயமரியாதைக்காரர்” என்கிற தலைப்பில் மும்பை எழுத்தாளர் கவிஞர் புதியமாதவியும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு புகழுரை நிகழ்த்தினார்கள்
அதன்பிறகு நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்விற்கு கலைஞர் தமிழ்ச் சங்கச் செயலாளர் திருமிகு.ஜேம்ஸ்தேவதாசன் வரவேற்பு உரை நிகழ்த்த
மும்பை கலைஞர் தமிழ்ச் சங்க நிறுவனர் / தலைவர் மேனாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் ம.சேசுராசு விழாவிற்கு தலைமை வகித்தார்.
இலவச நல உதவிகள்
இலவச நல உதவிகள் வழங்கி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலரை வெளியிட்டு விழா நிறைவுப் பேருரையாற்றினார் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் நூற்றாண்டு நிறைவு விழா மலரின் முதல் பிரதியை வெளியிட. மும்பை கம்பன் பள்ளி நிறுவனர் கல்வித்தந்தை எம்.ஏ.சூசை பெற்றுக் கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சஞ்சய் தீனா பாட்டில் எம்.பி., மும்பை பிரதேச காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் கணேஸ் குமார், நவிமும்பை கல்விக் கழக மேனாள் தலைவர் ரவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் கலைஞர் தமிழ்ச் சங்க பொருளாளர் க.மு.மாணிக்கம் கலைஞர் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ம.நீதித்துரை, இரா.மதியழகன், பேலஸ்துரை தமிழ் இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன்,மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன், மும்பை ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் மேனாள் தலைவர் கே.வி.அசோக்குமார்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர அமைப்பாளர் எஸ்.சாலமோன் ராஜா, மும்பை பகுத் தறிவாளர் கழக தலைவர் அ.ரவிச்சந்திரன்,
மும்பை ஆதிதிராவிட மகா ஜன சங்க தலைவர் எஸ்.பி.ஆனந்த், காரை கரு.ரவீந்திரன்,ஆ.பாலசுப்பிரமணியன்,காமராஜர் பள்ளி தலைவர் எம்.எஸ்.காசிலிங்கம், முன்னாள் மும்பை மாநகர்மன்ற கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம்,
சிவசேனா கட்சியை சார்ந்த எஸ்.அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியை சார்ந்த அருணாச்சலம்,தொழிலதிபர் சாமி பிள்ளை பாண்டுப் ராஜ்குமார், ஜெரிமெரி தமிழ்ச்சங்கத் தலைவர் இல.முருகன்,தமிழ் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் இரா.ரவிரஜினி, தானே ஜாகீர் உசேன், வே.ரவிச்சந்திரன்,அலெக்சாண்டர்,தாராவி ராஜன்,உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
பாராட்டு – நினைவுப்பரிசு
மும்பையில் சமூக சேவையாற்றி வரும் இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன்,தமிழின பயணிகள் இரயில்வே சங்கச் செயலாளர் டி.அப்பாத்துரை, மலாட் தமிழர் நலச்சங்கம் தலைவர் லெ.பாஸ்கரன் ஆகியோர் சேவையை பாராட்டி நினை வுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மும்பையில் திமுக வளர்ச்சிக்கு உழைத்த மூத்த தொண்டர்கள் 22 பேரை பாராட்டி சிறப்பிக்கப்பட்டது
பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை, சேலைகள் கலைஞர் படம் பொறித்த சுவர்க்கடிகாரம்,2025 ஆம் ஆண்டுக்கான தினசரி நாள்காட்டி மற்றும் பாந்திரா திமுக மூத்த தொண்டர் இ.கலியமூர்த்தியுடைய மருத்துவ செலவுக்கு பத்தாயிரம் வழங்கப்பட்டது கலைஞர் அவர்கள் தலைமையில் திருமணம் நடந்த தமிழ் இலக்கியா- ஆறுமுகம் அவர்களுக்கு 13 ஆண்டுகள் கடந்து ஆண்குழந்தை பிறந்தது அந்தகுழந்தைக்கு அமைச்சர் பிரபு உதயநிதி என்று பெயர் சூட்டினார்.
செல்வி கவியரசி சேசுராசு விழா நிகழ்ச்சி நிரல்களை தொகுத்து வழங்கினார்
நிறைவாக கலைஞர் தமிழ்ச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் மாறன் ஆரியசங்காரன் நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.
விழாவிற்கு முன்பு இசைக் கச்சேரி நடைபெற்றது. நாதசுவரம் மேளம் முழங்க வானவேடிக்கையோடு அமைச்சரை வரவேற்றது குறிப்பிடத்தக்கது
விழா ஏற்பாடுகளை தலைவர் ம.ஜேசுராஜ் தலைமையில், செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன், பொருளாளர் க.மு.மாணிக்கம், புரவலர் பொ.அன்பழகன் மற்றும் கலைஞர் தமிழ்ச் சங்கம் நிர்வாகி கள் சிறப்பாகச் செய்து இருந்தார்கள்.