தூத்துக்குடி, டிச. 12- தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மய்யத்தில் 30.11.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப் பாளராக வருகை தந்த மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் கூட்டத்தின் நோக்கம் பற்றிய தம் உரையில், இது வரையில் பகுத்தறிவாளர் கழகம் பயணித்த பய ணங்கள், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், உலக அளவில் பெரியாரின் சிந்தனைகளைக் கொண்டு செல்ல தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் காட்டிய வழிமுறைகள் பற்றியும், டிசம்பர் 28, 29இல் நடைபெறவிருக்கிற திருச்ச மாநாட்டின் பயன் கள் பற்றியும், அதற்காக ஒவ்வொரு தோழரும் துணைநின்று ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறி சிறப்புரையாற்றினார்.
அடுத்து கழக மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார் தம் கருத்தினைக் கூறி அனைவரையும் வர வேற்றார். மாவடடத் கழகத் தலைவர் மு.முனி யசாமி, காப்பாளர் சு.காசி, திமுக இலக்கிய அணி மோ.அன்பழகன் ஆகியோரின் கருத்துரைக் குப் பின் ப.க. மாவட் டச் செயலாளர் கி.கோபால் சாமி தலைமையுரையாகத் தன் கருத்தினைக் கூறி னார்.
இறுதியாக முன்னிலை யேற்ற காப்பாளர் மா.பால்ராசேந்திரம், திருச்சி மாநாட்டிற்கான நிதியினைத் தோழர்கள் ஒத்துழைப்புடன் வசூல் செய்து தலைமையிடம் ஒப்படைப்பதாக உறுதி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ் நன்றி கூற நிகழ்வு நிறைவு பெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திருச்சி மாநாட்டிற்குப் பேராளர்களை அனுப்பித் தருவதோடு, நிதியும் வசூல் செய்து ஒப்படைப்பதோடு, தனி வேனில் தோழர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.