திருச்சி, டிச. 12- திருச்சி மாநகர அமைப் பாளர் கனகராஜின் மூத்த மகன் க.ராசராசன் நவ.24 அன்று இயற்கை எய்தினார். அவரது படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 8.12.2024 அன்று காலை 10 மணியளவில் காட்டூரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், காட்டூர் பகுதி தலைவர் காமராஜ், செயலாளர் சங்கிலிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் மகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ப.ஆல்பர்ட் படத்தினை திறந்து வைத்தார். தலைமைக்கழக பேச்சாளர் இராம.அன்பழகன், நினைவேந்தல் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஓசூர் மாவட்ட வன வேந்தன், போரூர் பன்னீர்செல்வம், காட்டூர் பாலசுப்ரமணியன், விஜயராகவன், கரூர் பெருமாள், மாணவர் கழக சபரி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிவுச்சுடர், தமிழரசன், திருவரங்கம் நகர செயலாளர் முருகன், புலியூர் வேலு, திருவரங்கம் வாசகர் வட்டத் தலைவர் ஜெயராஜ், ராஜசேகரன், சிவகுமார், திருநாவுக்கரசு, பொன்னுசாமி, விடுதலை செல்வம், மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால்ராஜ், மாவட்ட மகளிரணி தோழியர் ரூபியா, சாந்தி, ரூபினா, நல்லான், சாரதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக கனகராஜ் நன்றி கூறினார்.