உடனே சாகடிக்கும்
பாம்புக்குப் பெயர்
நல்ல பாம்பு!
பார்த்தாலே தீட்டு
பக்கத்தில் வந்தாலே
தீட்டு என்பது
இந்து மதத் தாம்பு!
தலை தூக்கியது
வைக்கத்தில்
அந்தப் பாம்பு!
‘வை’ கத்தியை
என்று
வாள் தூக்கியது
ஈரோட்டு வேந்து!
வடக்கே ராமன்
கோவில் என்றார்
தெற்கே பெரியார்
ராமசாமி
நினைவகமாய்
நின்றார்!
ஆரியர் – திராவிடர்
போராட்டமே
இன்றைய
அரசியல் என்றார்…!
அய்யா அன்று
சொன்னது
மெய்யாகி
விட்டதின்று!
பொய்க்காது
பெரியார் சொல்
புரிந்துகொள்வீர்
மானுடரே!
– கவிஞர் கலி.பூங்குன்றன் –