திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள ‘பெரியார் உலகத்’திற்கு தஞ்சாவூர் சி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பொறியாளர் சிவானந்தம் தமது இணையர் நினைவில் வாழும் சந்திரா சிவானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு காப்பாளர் மு.அய்யனார், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரச் செயலாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன், மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட் ஆகியோரிடம் ரூ.25,000 நன்கொடை வழங்கினார்.