கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
புதுவையின் மேனாள் முதலமைச்சராக இருந்த வரும், எவரிடத்திலும் பான்மையோடு பழகிய பண்பாளரும், ‘டி.ஆர்.’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவருமான நண்பர் திரு. டி. இராமச்சந்திரன் அவர்கள் (வயது 93) நேற்று (8.12.2024) காலமானார் என்ற செய்திகேட்டு நாம் மிகவும் துயரம் அடைந்து வருந்துகிறோம்.
இவர் புதுவை மாநில தி.மு.க.வின் அமைப்பாளராக இருந்ததோடு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமாகவும் இருந்தவர்.
ஒரு முக்கிய தேர்தலின்போது கலைஞர் அவர்கள் இவரை முழுப் பொறுப்பாளராக்கி அவரை நம்பி ஒப்படைத்தார். அதனைச் செம்மையுடன் செய்து கலைஞரின் பாராட்டைப் பெற்ற நேர்மையாளர்.
எனக்கும், கடலூரில் எங்கள் குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய நண்பரும் ஆவார்.
அவரது உடல் நலம் குன்றிய நிலையில் சில காலம் பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட முடியாத நிலையில் அவர் மறைந்தார்.
அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத் தினருக்கு நமது ஆறுதலையும், அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
9.12.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தோழர்கள், மாநிலத் தலைவர் சிவ. வீரமணி அவர்கள் தலைமையில் இயக்கத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.