காரைக்குடி, டிச. 9- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 22-11-2024 வெள்ளி மாலை 05.00 மணியில் குறள் அரங்கத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமையேற்று கூட்டத்தின் நோக்கத்தை விலக்கிப் பேசினார். மாவட்ட தலைவர் ம.கு.வைகறை, கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, கருத்துரையாற்றினர். கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார்.
முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி, ப. க மாவட்ட துணைத்தலைவர் முனைவர் செ.கோபால்சாமி, ப.க மாவட்ட செயலாளர் ந.செல்வராசன், த.திருமேனி, காரைக்குடி மாநகர தலைவர் ந.ஜெகதீசன், காரைக்குடி மாநகர செயலாளர் அ.பிரவீன் முத்து வேல், மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன், ஆகியோர்கள் நிகழ்வின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் இ. ப. பழனி வேல் நன்றி கூறினார்.
டிசம்பர் 12 கேரளாவில் நடக்க இருக்கின்ற வைக்கம் விழாவில் காரைக்குடி மாவட்ட இளைஞரணி சார்பில் பெருமளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.
காரைக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக தெருமுனை கூட் டங்கள் நடத்துவது எனவும்.
டிசம்பர் 28, 29இல் திருச்சியில் நடைபெறுகின்ற இந்திய பகுத் தறிவாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு 13ஆவது மாநாட்டில் காரைக்குடி மாவட்ட கழகம் சார்பில் பெருமளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.