வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு வழங்கிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒன்றிய அரசு மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களில் எத்தனை பேர் ஆண்கள், பெண்கள், 3ஆம் பாலினத்தவர் என்ற விவரம் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த தகவல், அலுவலக பராமரிப்பு ஏட்டில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. முக்கிய துறையில் இந்த தகவல் கூட இல்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.