டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*வழிபாட்டு தலங்கள் சட்டம் 1971-அய் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரணை செய்திட முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிர சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பா.ஜ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர், சட்டப்பேரவையின் முதல் நாளில் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க மறுப்பு.
* எஸ்மா சட்டம் அமல் உ.பியில் அரசு ஊழியர்கள் 6 மாதம் போராட தடை: யோகி அரசு உத்தரவு
*பேச்சுவார்த்தை நடத்த மோடி அரசு தயாராக இல்லை; டில்லிக்கு பேரணியாக செல்வோம் என விவசாயிகள் சங்க தலைவர் பாந்தர் அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*அசாமின் முடிவைத் தொடர்ந்து பீகாரில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேச்சு; நிதிஷ் குமார் கட்சியினர் அதிர்ச்சி.
தி இந்து:
* பக்கவாட்டு நுழைவு பிரச்சினையை ஆராய நாடாளுமன்ற குழு. குறிப்பிட்ட பணிகளுக்கு ஆட்கள் நியமிப்பதற்காக ஒன்றிய அரசில் பக்கவாட்டு ஆட்சேர்ப்பு 2018 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு கிடையாது.
தி டெலிகிராப்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீட்டிற்காக கிரீமிலேயரை ஒழிக்க வேண்டும், புதுடில்லி ஜந்தர் மந்தரில் ஓபிசி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
*”பாஜக வாஷிங் மெஷின் சுத்திகரிப்பா?” ரூ.1000 கோடி பினாமி சொத்துகள் வழக்கில் அஜித் பவாரி டம் சொத்துகள் ஒப்படைப்பு – தீர்ப்பாயம் விடுவிப்பு.
– குடந்தை கருணா