திருவாரூர், டிச.8- திருவாரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் (சுயமரியாதை நாள்) விழா, மனநலக் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
திருவாரூர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மேனாள் மாவட்ட ப.க தலைவர் இரா.சிவக்குமார், கழக பேச்சாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னி லையில், 2.12.2024 அன்று நண்பகல் 12 மணிக்குத் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நலத்திட்ட உதவி
அதனைத் தொடர்ந்து திருவாரூர் மனநலக் காப்பகத்தில் உள்ள 60 பயனா ளிகளுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவி (மதிய உணவு, போர்வை 60) திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், நகர திமுக செயலாளர் வாரை.பிரகாஷ், மாவட்ட ப.க. மேனாள் தலைவர் இரா.சிவக்குமார், கழகப் பேச்சாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இரா.நேரு ஆகியோர் வழங்கினர்.
நிகழ்வில், திருவாரூர் திமுக நகர செய லாளர் வாரை.பிரகாஷ், திருவாருர் திமுக ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் A.தேவா, D.செந்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திமுக, மாநில திமுக விவசாயணி துணை செயலாளர் இரா.சங்கர், எஸ்.என்.அசோகன், மாவட்ட பிரதிநிதி திமுக, ஜி.வரதராஜன், ர.ரஜினி சின்னா, திமுக நகர பொருளாளர், ராஜ்.கருணாநிதி மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி திமுக, பாரிதிசெல்வன் தலைமை கழக பேச்சாளர் திமுக, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இரா.நேரு, நகர செயலாளர் ப.ஆறுமுகம், துணைச்செயலாளர் நா.துரைராஜ், நகரச் செயலாளர், கொட்டாரக்குடி ரமேஷ் மற்றும் தி.க., திமுக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் பிறந்தநாளில் பிறந்தநாள் காணும் பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் க. முனியாண்டி அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர்.