7.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள்; உங்கள் மதவெறி – ஜாதி வெறி எண்ணம் பெரியார் மண்ணில் நிறைவேறாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
* மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி இருக்கையில் ரூ.500 பணக்கட்டு; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்; விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*மகாராட்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி ஹிந்துத்வா அரசியலால் வென்றது, முதலமைச்சர் பட்னாவிஸ் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது கண்டிக்கத்தக்கது, அவர்களின் கோரிக்கை களை அரசு ஏற்க வேண்டும்: ராகுல் காந்தி
தி டெலிகிராப்:
* வகுப்புவாத விஷத்தை பரப்பும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். ‘மிகப்பெரிய துக்டே-துக்டே கும்பல்’ என்று காங்கிரஸ் கண்டனம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* அயோத்தி, பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு மதச்சார்பின்மையை நிலை நிறுத்தவில்லை, உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதியும், பிரபல சட்ட நிபுணருமான ஆர்.எஃப்.நாரிமன் கருத்து.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment