அழுத்தம் கொடுத்து இணங்கும் அளவுக்கு தானும், விசிகவும் பலவீனமாக இல்லை என தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்க முடியாத அளவிற்கு திருமாவளவனுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாக விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த அவர், விஜய்யின் கருத்தில் தனக்கு உன்பாடு இல்லை எனவும், எந்த அழுத்தமும் தனக்கு கொடுக்கப்படவில்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.