திருச்சியில் யூனியன் வங்கி ஓபிசி நலச்சங்க 12ஆம் மாநில மாநாடு தந்தை பெரியார் படத்திற்கு மரியாதை

1 Min Read

அரசியல்

திருச்சி, ஜூலை 24- யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியா ளர் நல சங்கத்தின்  12ஆம் மாநில மாநாடு நேற்று (23.07.2023) திருச்சி ஓட்டல் ரம்யாஸ் (சவுபாக்யா அரங்கம்)  காலை 11.00 மணிக்கு எழுச்சியுடன் தொடங் கியது. 

தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை மரியாதை செலுத்தி மாநாடு துவங்கியது.

நல சங்க தலைவர் கோ.கருணா நிதி தலைமை வகித்தார்.. பொதுச் செயலாளர் எஸ். நடராசன் வர வேற்புரை நிகழ்த்தினார்.

யூனியன் வங்கி சென்னை மண்டலத் துணைப் பொது மேலா ளர் ஜி.முருகன் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி னார். வங்கி அதிகாரிகள்: சென்னை பிராட்வே பிராந்திய தலைவர்சி.பிரபு, சேலம் பிராந்திய தலை வர்எம்.செல்லதுரை திருச்சி பிராந் திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா, திருப்பூர் பிராந்திய தலைவர் பி.தனசேகரன், திருநெல்வேலி பிராந்திய தலைவர் பி.ஆர். ரஞ்சித், சென்னை மண்டல தணிக்கை துறை தலைவர் ஒய்.எஸ்.பி.சாஸ்திரி, அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி நல சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் எம். பாக்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்பு குழு தலை வர் ஆர்.புருஷோத்தமன் நன்றி யுரை நல்கினார்.

முன்னதாக  நல சங்க நிர்வாகி கள், உறுப்பினர்கள் திரளாக சென்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்தனர்.

பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு நிர்வாகிகள் ஏ.ராஜசேகரன் (அய்.ஓ.பி.), செல்வம் (பெல், திருச்சி), நல சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, கிரீமிலேயர் முறை ஒழிப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு கிளார்க் பணி நியமனத்தில் முன்னுரிமை அளித்து கிளார்க் பணிகளில் நிய மனம் செய்திட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *