பீகார் தேர்தலில் வென்றால் 200 யூனிட் இலவச மின்சாரம் – தேஜஸ்வி வாக்குறுதி

2 Min Read

பாட்னா, டிச. 6- பீகார் சட்டப் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைமையிலான மகாபந்தன் கூட்டணி வென்றால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

சட்டபேரவை தேர்தல்

2025 இறுதியில்தான் பீகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஆா்ஜேடி இப்போதே தோ்த லுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது. பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி பீகாரில் ஆட்சியில் உள்ளது. மக்களவைத் தோ்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்தாலும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற அரியானா பேரவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. மகாராட்டிரத்திலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற் படுத்தியுள்ளது.

2025-ஆம் ஆண்டு தொடக் கத்தில் டில்லி, இறுதியில் பீகார் என அந்த ஆண்டில் இரு சட்டப் பேரவைத் தோ்தல்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. இதில் முக்கிய மாநிலமான பீகாரில் வெற்றி பெற்று தங்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சி கூட்டணி உள்ளது.இந்நிலையில் பீகார் எதிர்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், முங்கா் நகரில் ஆா்ஜேடி தொண்டா்களுடன் 4.12.2024 அன்று ஆலோசனை நடத்தினார். பின்னா் செய்தியா ளா்களிடம் அவா் கூறியதாவது.

200 யூனிட் இலவச மின்சாரம்

அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக இப்போதிருந்தே மக்களுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கிவிட்டோம். பீகாரில் ‘ஸ்மார்ட் மீட்டா்’ என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனா். இது மாநில அரசே முன்னின்று நடத்தும் ஏமாற்று வேலை.

அடுத்து பீகாரில் ஆா்ஜேடி ஆட்சி அமைந்தவுடன் இந்த இன்னலில் இருந்து மக்கள் விடுவிக்கப்படுவார்கள். 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம். அதே நேரத்தில் இந்த மின் கட்டணக் கொள்ளையில் இருந்து மக்களைக் காக்க நிதீஷ் குமார் அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்த இருக்கிறோம்.ஒன்றிய பாஜக கூட்டணி யில் அங்கம் வகிக்கும் நிலையி லும் பீகாருக்கு சிறப்புத் தகுதி பெற்றுத் தர நிதீஷ் தவறிவிட்டார் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *