குடந்தை ப.க. கலந்துரையாடலில் தீர்மானம்
குடந்தை, டிச. 6- 30.11.2024 அன்று மாலை ஏழு மணி அளவில் குடந்தை பெரியார் மாளிகையில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் முனைவர் மா.சேதுராமன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர் நிம்மதி பொதுக்குழு உறுப்பினர் க.சிவக்குமார், பன்னீர்செல்வம் ஏஇஓ (ஓய்வு), செல்வரசன், மாரி, மாநில அமைப்பாளர் மாயக்கண்ணன், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முருகானந் தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் நீடாமங்கலம் இரமேஷ் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு மாநாட்டில் நாம் பெருவாரியாக கலந்து கொள்ளுதலின் அவசியம் குறித்து நோக்க உரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகப் மாநில பொதுச் செயலாளர் வா. தமிழ் பிரபாகரன் பேசுகையில் திராவிடர் இயக்க வரலாற்றில் என்றும் பெருமை பேசும் கழக பொதுக்குழுவினை குடந்தையில் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய குடந்தை பகுதி திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள், பெரியாரிய உணர்வாளர்கள் அனை வரையும் பாராட்டி மகிழ்ந்தார்.
திருச்சியில் டிசம்பர் 28,29 தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் மாநாடு தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் நடத்துவதன் சிறப்பு மற்றும் அதன் நோக்கத்தினை தெளிவாக எடுத்துரைத்தார்.
ஏற்பாடு
மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக பகுத் தறிவாளர் கழகத்தினரால் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் மாநாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள், மாலை நேர பொதுக்கூட்டம், வெளிமாநில தோழர்கள் பெரியார் உலகம் பார்வை, உணவு ஏற்பாடு, தோழர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் முதலியவற் றைப்பற்றி விளக்கி கூறினார்.
பின்னர் குடந்தை பகுதியைச் சேர்ந்த தோழர்கள் தனி வாகனம் ஒன்று ஏற்பாடு செய்து பெருவாரியான தோழர்களை பகுத்தறி வாளர் கழகம் சார்பில் திரட்டி திருச்சி மாநாட் டில் கலந்து கொண்டு குடந்தை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் பகுத்தறிவா ளர் கழக பொறுப்பாளர் பெரியார் கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.