சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
சிவகங்கை, டிச. 6- சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் சிவகங்கை, காஞ் சிரங்காலிலுள்ள தென்றல் இல்லத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சு.ராசாங்கம் தலைமையில் மாவட்டச் செயலாளர் வைகை பிரபாகர் வரவேற்புரையுடன் தொடங்கியது.
இக்கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் பொதிகை கோவிந்தராஜன், கோ. சந்திரசேகர் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக மாவட்டம் புரவலர் வேம்பத்தூர் ஜெயராமன் கலந்து கொண்டார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். நோக்க உரையாற்றிய மாநில அமைப்பாளர் ஒ.முத்துக்குமார், திருச்சியில் டிசம்பர் 28, 29ஆம் தேதிகளில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் 13ஆவது மாநாடு குறித்தும், அதற்கு தோழர்களுடைய பங்களிப்பு குறித்தும் பேசியதோடு தோழர்கள் அவர்தம் குடும்பத்தோடு கலந்து கொள்வதோடு தங்களுக்கு அறிமுகமான தோழர்களையும் அழைத்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கழக செயல்பாடுகள்
மாவட்டத்தில் நடைபெற்ற கழக செயல்பாடுகளை எடுத்து ரைத்து கழகத்தில் புதிய உறுப்பி னர்களை அதிக அளவில் இணைக்க முயற்சிக்க வேண்டும் என்றும், அதற்கு தோழர்கள் அவரவர் பகுதிகளில் இருக்கின்ற தோழர்களை இனம் கண்டு கழகத்தில் சேர்க்க முயற்சிப்பதோடு கழகத்தை விரிவுபடுத்த என்ன மாதிரியான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற கருத் துக்களை ஒவ்வொருவரும் தங் களுடைய சுய அறிமுகத்தோடு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ப.க. மாவட்டத் தலைவர் சு.ராசாங்கம், தம் பகுதியில் தகவல் பலகை ஒன்றை அமைத்து அதில் நாள்தோறும் தந்தை பெரியாரின் சிந்தனைக் கருத்துக்களை எழுதி பொதுமக்களிடையே கொண்டு போய் சேர்க்க இருப்பதாக தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர் வைகை பிரபா தனதுரையில், பகுத்தறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, அதை செயல்படுத்தும் விதமாக அனைவரும் ஒருங்கிணைந்து அறிவியல் கருத்துக்களை பல்வேறு போட்டிகளின் மூலமாக மாணவர்களிடத்திலே கொண்டுபோய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், மனிதப் பற்று தான் முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பெரியார் 1000 போட்டிகள்
அடுத்துப் பேசிய மாவட்டத் துணைத் தலைவர் பொதிகை கோவிந்தராஜன், பெரியார் 1000 போன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாவட்ட துணைச் செயலா ளர் கோ. சந்திர சேகர் அறிவி யல் மனப்பான்மையின் அவ சியம் குறித்தும், அதனை மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக தோழமை அறிவியல் இயக்கங்களோடு இணைந்து செயல்படுத்தலாம் என்றும், தொடர்ந்து மாணவர்களோடு தொடர்பில் இருக்கும் விதமாக புதிய வடிவங்களில் பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை நடத்துவதோடு அதனை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பு வதை நமது கடமையாக கருதி செயல்படுத்திட வேண்டும் என்றும் கூறியதோடு கழக பொதுச் செயலாளரின் வழி காட்டுதலை ஏற்று முனைப்போடு செயல்படுவோம் என்றும் உறுதி யளித்தார்.
புதிய தோழர்களின் கருத்துகள் அனைத்தையும் கவனமுடன் கேட்ட மாநிலப் பொதுச் செயலாளர் வி.மோகன் புதிய தோழர்களின் கருத்துக்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்து மகிழ்ந்தார் கள். மேலும் திருச்சியில் நடை பெற இருக்கின்ற இந்திய பகுத்தறிவாளர் கழக 13ஆவது மாநாட்டில் நடைபெற இருக் கின்ற நிகழ்ச்சிகளையும், மாநாட்டின் நோக்கத்தையும், முன்னேற்பாடுகளையும் தெளிவு படுத்தினார்கள்.
மாநாடு குறித்த உலகளவிலான எதிர்பார்ப்புகள் கலந்து கொள்ள இருக்கின்ற தலைவர்கள், மாநாட்டுச் செலவினங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
நிதி திரட்டுவது…
இம்மாநாடு வெற்றி மாநாடாக வெகுசிறப்பாக நடைபெறுவதற்கு அதிக அளவில் நிதி தேவை என்பதை கவனத்தில் கொண்டு நிதி திரட்டுவதோடு மட்டுமல்லாமல் அதிக எண்ணிக்கையில் தோழர்களை அழைத்து வர வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்கள்.
இன்றைய நிலையில் பகுத் தறிவாளர் கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முன்னுதாரணங்களோடு எடுத்துரைத்ததோடு அதிக செலவில்லாமலும், பிரச் சினைகளுக்கு இடமளிக்காமலும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை தோழர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்து வழிகாட்டினார்கள். அத்தோடு ஒன்றியங்கள் தோறும் கழகத்தை விரிவுபடுத்தி உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.
மாநிலப் பொதுச் செயலா ளரின் உரையானது கூட்டத்தில் கலந்து கொண்ட புதிய தோழர்களுக்கு கழகம் பற்றிய தெளிவையும் உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும் விதமாக அமைந்தது.
சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்க்காணும் மூன்று தீர்மானங்கள் ஒரு மன தாக நிறைவேற்றப்பட்டன.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
சிவகங்கை பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் மோகன்ராஜ் அத்தை தோழர் பரிபூரணம் (ஆசிரியை) மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
28, 29 டிசம்பர் 2024, திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு தொடர்பாக திட்டமிடுவதெனவும், அமைப்புப் பணிகள் குறித்து திட்டமிடுவதெனவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஒன்றிய அளவில் கழகத்தை விரிவுபடுத்துதல் எனவும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் மாநாட்டு நிதியாக மொத்தம் ரூ.7000/= முதல் தவணையாக பொதுச் செயலாளர் அவர்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பா ளர் சு. செல்லமுத்து நன்றி கூறினார்.