இந்நாள் – அந்நாள்

3 Min Read

அம்பேத்கர் நினைவு நாள் [6.12.1956]

அம்பேத்கர் தமது 28ஆம் வயதில் 1919லேயே ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகார பிரதிநித்துவம் வேண்டும் என்று ஆங்கில அரசின் நிர்வாக சீராய்வுக்கான சவுத்பர்ரோ கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பித்தவர்.
. 1930, 1931, 1932 என்ற ஆகிய ஆண்டுகளில் லண்டனில் இந்திய பிரதிநிதிகளுக்கும் ஆங்கில அரசுக்கும் இடையேயான வட்ட மேசை மாநாடுகள் நடந்தன. அந்த மூன்று மாநாடுகளிலும் கலந்துகொண்டவர் டாக்டர் அம்பேத்கர். அங்கு அவர் முன் வைத்ததும் இதே ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனித் தொகுதி வேண்டும் என்பதுதான். அதன்படி அப்போதைய இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு தனித் தொகுதிகள் வழங்கவும் ஒப்புக்கொண்டுவிட்டார்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் காந்தியார் இது ஹிந்துக்களின் ஒற்றுமையை குலைக்கும் முயற்சி என்று கூறி பூனாவில் சகலவசதிகளுடனும், இரண்டு உதவியாளர்களையும், பாலுக்காக ஜோடி ஆடுகளோடு சிறையில் இருந்தபடியே பட்டினிப் போராட்டம் தொடங்கிவிட்டார்.
பிறகு காந்தியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் இடங்களிலேயே ஒடுக்கப்பட்டவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஒரு முடிவு வந்தது.
அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தவர். இன்றும் அந்த சட்டத் திருத்தங்கள் தான் முதன்மையாக இருக்கின்றன. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியில் சட்ட வல்லுநர்களில் ஒருவராக இருந்தார் அதே அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும் ஆவார்.

காந்தியார் ஒருமுறை அம்பேத்கரிடம் “மிஸ்டர் பீமாராவ் உங்கள் செயல்கள் (அப்போது அவர் காலனி ஆட்சியில் சட்ட வல்லுநர்களின் இடையில் சட்ட காரியங்களை கவனித்துக் கொண்டிருந்தார்) நமது தாய்நாட்டின்சுதந்திரத்திற்கு தடையாக தெரிகிறது ஆகையால் நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தப் பொறுப்பை விட்டு விட்டு எங்களுடன் சேர்ந்து இந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு அம்பேத்கர் சொன்ன பதில் மிகவும் பிரபலமான பதிலாகும். அது”மிஸ்டர் காந்தி, நீங்கள் கூறும் தாய்நாடு எங்களுக்கானது இல்லையே…! இந்த நாட்டில் யாருக்கு உரிமை இருக்கிறது…மேல் ஜாதி என்று சொல்லப்படும் மக்களுக்குத்தான் இருக்கிறது
இந்த நாடு ஜாதியாலும், வர்ணங்களாலும் பிரிந்து கிடக்கிறது . உங்கள் வேதம் கூறும் சூத்திரர்களான எங்களுக்கு நடக்க உரிமை இல்லாமல், பகல் வெளிச்சத்தில் நடப்பதற்கு உரிமை இல்லாமல், உடம்பை மறைக்க உரிமை இல்லாமல், கடையில் போய் உப்பு என்று கேட்டால் அடித்துக் கொல்லுகின்ற இந்த நாடு எங்களுக்கென்று சொந்தம் இல்லாமல் இருக்கும்போது, இதை எப்படி சுதந்திரம் என்று சொல்ல முடியும்? சுதந்திரம் என்று சொன்னால் எல்லோருக்கும் நானா ஜாதி மக்களுக்கும் ஒரே நீதி இருக்க வேண்டாமா?

(பார்ப்பனர்கள் குற்றம் செய்தால் தலையை மொட்டை அடித்தால் போதும் ஆனால் அதே குற்றத்தை தாழ்த்தப்பட்டவன் செய்தால் அவனுக்கு செய்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனை உண்டு) ஒரே ஊதியம்(நாள் முழுவதும் வேலை செய்தால் ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு கிடைக்கும் கூலி ஒரு மாதத்தில் இரண்டு மூட்டை நெல்லு, ஒரு குடும்பமே வேலை செய்தாலும் அந்த இரண்டு மூடை நெல்தான்)
எல்லோரும் சமம் என்ற நிலை வரும் போது தான் சுதந்திரத்திற்கு அர்த்தம். அந்த சுதந்திரம் கிடைப்பதற்கு நான் முன்னே நிற்கிறேன். அதற்கு முன் யாருக்கான சுதந்திரம் என்று நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.’’ என்று காந்தியாரிடம் மறு கேள்வி கேட்டார் அம்பேத்கர்
தான் நம்பி இருந்த மதநம்பிக்கையில் இருந்து விலகி புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார் ஜாதி கொடுமையை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் விலகி நின்றாலும் முதல் சுதந்திர இந்தியாவின் நீதி அமைச்சராக, சட்டங்களை இயற்றும் சட்ட வல்லுநராக அவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *