ஒரு விஷயத்தைப் பற்றிச் சரியோ, தப்போ என்பதைக் கவனிக்காமல், எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பளந்து வயிறு வளர்ப்பதையே வாழ்க்கையாய்க் கொண்ட மக்கள் உலகம் எங்கும் இருந்துதான் வருகின்றார்கள். இவர்களுடைய உதவி யாருக்கும், எவ்வளவு குறைந்த விலைக்கும் கிடைக்கக் கூடும்.
(‘குடிஅரசு’ 25.12.1932)