ஸநாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம்! வி.சி.க. தலைவர் திருமாவளவன்

1 Min Read

மும்பை, டிச.5- மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமி’ பல ஏக்கர் பரப்பளவி்ல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் நினைவு நாளில், ஸநாதனத்தை முறியடிக்க உறுதி யேற்போம் என்றும் கூறியுள்ளார். அம்பேத்கர் நினைவு நள் 6.12.2024 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, விசிக தொண்டர் களுக்கு கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்ட மேதை அம்பேத்கர் கால மாகி 68 ஆண்டுகள் ஆகிவிட்டன. மும்பையில் உள்ள சைத்யபூமி எனும் அவரது நினைவிடம் பல ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு 350 அடி உயரத்தில் அவரது வெண்கல சிலை நிறுவப்படுகிறது. இத்துடன் அவரது பெருவாழ்வை விவரிக்கும் கண்காட்சியகம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான மாபெரும் நூலகம், கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்டவை கட்டமைக் கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர் 65 வயதிலேயே காலமாகிவிட்டார். தேடித் தேடி நூல்களை கற்பதிலும், ஆய்ந்து ஆய்ந்து நூல்களை படைப் பதிலும் அவரிடம் தீவிர வெறி இருந்தது.

அரசமைப்பு சட்டம் மற்றும் ‘புத் தமும் அவரது தம்மமும்’ என்ற நூல் ஆகிய இரண்டும் அம்பேத்கர் எனும் பேராற்றலின் பெருங்கொடைகள். இவை தீயவற்றை எரிக்கும் தூயவை. ஜனநாயக அறத்தை காக்கும் பேரரண். இந்த இரண்டையும் குறிவைத்துள்ள சனாதனத்தை அடையாளம்கண்டு, அதை முறி யடிக்க அவரது நினைவு தினத்தில் உறுதியேற்போம். அவரது ஞான பேராயுதங்களை ஏந்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *