சபரிமலையில் டோலி தொழிலாளர்கள் உரிமைக்காக போராடக் கூடாதா?

viduthalai
2 Min Read

திருவனந்தபுரம், டிச. 5- டோலிதொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக, சபரிமலையில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப் பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் டோலி தொழிலாளர்கள் அய்யப்ப பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்துடோலிசேவைக்கு முன்கூட்டியே பணத்தை செலுத்தும் (பிரீபெய்டு) வசதியை ஏற்படுத்தப் போவதாக தேவஸ்தானம் அறிவித்தது. இதை கண்டித்து சபரிமலையில் 3.12.2024 அன்று 1,500-க்கும் மேற்பட்டடோலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வயதான மற்றும் உடல் நலம் குன்றிய அய்யப்ப பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் டோலி தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் இந்த போராட்ட பிரச்சினை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விவாதித்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்டுள்ள தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை ஆராதனைக்குரிய இடமாகும். எனவே இங்கு போராட்டங்கள் நடத் தக்கூடாது. அதனை அங்கீகரிக்க முடியாது. பம்பை, சபரிமலையில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள், பக்தர்களின் ஆராதனை உரிமையை பாதிக்கும் செயலாகும். டோலி தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக பேசி தீர்த்து இருக்க வேண்டும். விரதம் இருந்து வரும் பக்தர்களிடம் விலை பேசுவது ஏற்புடையது அல்ல. பக்தர்களை அழைத்து செல்ல முடியாது என கூற டோலி தொழிலாளர்களுக்கு அதிகாரம் இல்லை. அதே போல் பக்தர்களை சுமந்து செல்லும் வழியில் அவர்களை நடுவழியில் இறக்கி வைத்து பணம் கேட்டு மிரட்டும் டோலி தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம்? ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடில்லி, டிச. 5- ஒன்றிய அரசு ஊழியா்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என ஒன்றிய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஒன்றிய அரசு ஊழியா்கள் 60 வயதில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இதை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. குடிமைப் பணிகளில் இளைஞா்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு துறைகளுக்குத் தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் ரோஸ்கா் மேலா (வேலைவாய்ப்பு முகாம்களை) ஒன்றிய அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *