முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (4.12.2024) தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து, புதுடில்லியில் 30.11.2024 அன்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற FICCI Turf 2024-14ஆவது பன்னாட்டு விளையாட்டு கருத்தரங்கில் 2024ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக (Best State Promoting Sports) தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, அதற்கென வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். உடன் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் உள்ளனர்.