மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பு

2 Min Read

 தமிழ்நாட்டில் பயிற்சி தரப்படும் என்று அறிவிப்பு 

சென்னை, ஜூலை 24– தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள வரும்படி மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங் கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்கு வதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகி றது. தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முன்னெடுப்பு திட்டங் களால், தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாடு விளையாட்டுப் வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனை யுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் பன்னாட்டு தரத்திலான மணிப்பூர் விளையாட்டு வீரர் களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பு தமிழ்நாட்டில் பயிற்சி தரப்படும் என்று அறிவிப்புகளை, குறிப்பாக பெண் வாகையர்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே தொடங்கப் பட்டுள்ளன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – எல்லா ஊரும் எனது ஊர்.எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதா ரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையான தாகத் திகழும் என்பதுதான் தமிழர் பண்பாட்டின் அடை யாளமும், அடித்தளமும் ஆகும். 

அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு வந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன். 

இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உறுதி அளித்துள்ளார். மணிப்பூர் மாநிலத் தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் விளையாட்டு வசதியை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் sஜீஷீக்ஷீtstஸீ2023@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 8925903047 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *