புதுடில்லி, டிச.4- குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: வேளாண் அமைச்சரிடம் ஒரு விஷயத்தை கேட்க விரும்புகிறேன். விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு தந்த வாக்குறுதிகள் என்ன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை; அவற்றை நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேண்டும். கடந்த ஆண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டும் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?
ஜக்தீப் தன்கரின் இந்த கேள்விக்கு, அமைச்சர் சவுகான் பதிலளிக்கவில்லை.