15 நகரங்களை ஒதுக்கீடு செய்யக்கோரும் தமிழ்நாடு அரசு டில்லியில் ஒன்றிய அமைச்சர் மனோகர்லால் கட்டாரை தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு சந்தித்தார். அப்போது ‘‘நூறு நகரங்கள் 100 cities programme for sustainable urban development initiatives” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு 15 நகரங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். முன்னதாக நிர்மலா சீதாராமனிடம், ஜல் ஜீவன் திட்டத்தை 2028 வரை நீட்டிக்கவும், ஏற்கெனவே வழங்க வேண்டிய நிதியை தரக்கோரியும் வலியுறுத்தியிருந்தார்.