பெரியார் கல்வி நிறுவன நிர்வாகிகள் – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த பாலாமணி (84) நேற்று (டிச.2) இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பெரியார் வீரவிளையாட்டுக்கழகத் தலைவர் பேரா.ப.சுப்ரமணியன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பாக்கியலட்சுமி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் க.வனிதா, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி, பெரியார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி, மற்றும் கழகத் தோழர்கள், நாகம்மை குழந்தைகள் இல்லப்பணியாளர்கள், மற்றும் இல்லக்குழந்தைகள், சாமி கைவல்யம் இல்ல முதியோர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் மாலை 5.30 மணியளவில் கருமண்டபம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெரியார் கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் இரா.தங்காத்தாள் மற்றும் பாலாமணியின் மகள் அமலாமணி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்திய பிறகு உடல் எரியூட்டப்பட்டது.