கிருட்டினகிரி, டிச. 3- கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தனர்.
கிருட்டினகிரி கழக ஆதரவளரும் கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவரும் சாயிராம் ஏஜென்சி உரிமையாளருமான வெ.நாராயணமூர்த்தி அனைத்து வணிகர் சங்க கிருட்டினகிரி மாவட்டச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ள அவருக்கு கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் சால்வை அணி வித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
உடன் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, சேலம் மாவட்டத் தலைவர் இரா.வீரமணி ராஜா, தலைமை கழக அமைப்பாளர் ஆத்தூர் அ. சுரேசு, கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் சேலம் மாவட்ட கழகத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சேலம் இரா.வீரமணி ராஜா கிருட்டினகிரிக்கு வருகை தந்த போது அவருக்கு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயண மூர்த்தி, தலைமை கழக அமைப் பாளர் ஊமை.செயராமன், கிருட் டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகி யோரும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது ஆத்தூர் அ.சுரேசு, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராசேசன் உடன் இருந்தனர்.