ஆசிரியர் வீரமணி
ஆர். எஸ். எஸ். என்ற ராஷ்டிரீய சுய சேவக் சங் இயக்கமும் அதன் கொள்கை களையே ‘பழைய கள் புது மொந்தை’ என்ற பழமொழிக்கேற்ப, புதிய வடிவில்- புதுப்பெயர்களில் – வடித்துத் தரும் இயக்கங்கள் அமைப்புகள் பற்றித் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, மனித நேயத்தில் பற்றுள்ள எவரும் ஸநாதனத்தை, குல தர்மத்தை நியாயப்படுத்தி அதற்குப் புத்துயிர் கொடுக் கும் முயற்சிகள் பற்றி மிகவும் எச்சரிக்கை யுடன் செயல்பட வேண்டும்.
பிராமணர் சங்கம் என்ற பார்ப்பனர் சங்கம், விசுவ இந்து பரிஷத், ஜன்ஜாக்ரண், ஜனகல்யாண், இந்து முன்னணி.
இதுபோன்ற பெயரில் இயங்கும் பல அமைப்புகளும் ‘இந்துராஷ்டிரம்’ என்ற இந்துமத ஆரிய தர்ம ஆதிக்கத்தின் கொடி பறக்கவேண்டும் என்பதற்காகவே ஆகும்.
1925இல் துவக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரிய மறுமலர்ச்சிக்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
அதன் நிறுவனத்தலைவரான டாக்டர் கேசவ பாலிராம் ஹெட்கேவர் ஒரு புரோகிதத் தொழில் செய்த மராத்திப் பார்ப்பனர்ப் பரம்பரையினர் ஆவார்! அவரது நூற்றாண்டு என்ற பெயரில் எப்படியெல்லாம் பிற்போக்கு, மதவெறித்தனத்திற்குப் புத்துயிர் ஊட்ட பார்ப்பனர்களும், அவர்களது மாயவலையில் சிக்கியுள்ள அப்பாவிகளான பார்ப்பனரல்லாதாரும் முயற்சிக்கின்றனர் என்பது கண்கூடு.
பார்ப்பனர் பரம்பரைத் தொடர்ச்சி
வடநாட்டு, வெளிநாட்டுப் பண உதவிகள் இந்த அமைப்புகளுக்கு வற்றாத ஜீவநதியின் பிரவாகம்போல் கொட்டுகின்றன!
இதன் நிறுவனத் தலைவருக்குப்பின் அடுத்த தலைவராக நியமனம் பெற்றவர் கோல்வால்கர் என்ற மராத்திப் பார்ப்பனர். அவரது மறைவுக்குப் பின் நியமனம் பெற்றவர் பாலாசாகேப் தேவரஸ் என்ற மற்றொரு மராத்திப் பார்ப்பனர்.
அகண்ட இந்துஸ்தானம் என்பதே இதன் லட்சியம்.
அதாவது பாகிஸ்தான் உட்பட இந்தியா என்பது இவர்களது இலட்சியம்.
ஆர்.எஸ்.எஸ். பிரார்த்தனை முதலில் ஒரு பாதி இந்தியிலும் மற்றொரு பாதி மராத்தியிலும் துவக்கப்பட்டு நடைபெற்றது. இந்தப் பிரார்த்தனை ‘ஆரிய சமாஜத்தின் பிரார்த்தனையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியாகும். பீரார் சென்ட்ரல் பிராவின்ஸ் என்ற மத்திய மாகாணப் பகுதிகளில் இரு மொழியினரை ஈர்க்க முதலில் இந்த ஏற்பாடு செய்து 1939-லிருந்து தற்போது பாடப்படும் சமஸ்கிருத பிரார்த்தனையே நடைமுறைக்கு வந்தது.
டாக்டர் ராதா கிருஷ்ணனின்
பார்ப்பனப் பற்று
காசியில் இந்து பல்கலைக் கழகம் என்று ஏற்படுத்தப் பட்டதே அதிலும் இதன் கிளை ஒன்று துவங்க இந்துமத வெறியரான பண்டித மதன் மோகன் மாளவியா என்ற பார்ப்பனர் துணை நின்றார்.
மிகப் பெரிய தத்துவ ஞானியாக பார்ப்பனர்களாலும் பல பார்ப்பனரல்லாத ‘பெரிய மனிதர்களாலும்’ போற்றப்படும் டாக்டர் ராதா கிருஷ்ணன், காசி இந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அணிவகுப் பான ‘ஷாகா’விற்கு வாரம் ஒருமுறை வந்து பார்வை யிட்டதோடு, இந்த எண்ணிக்கையை நீங்கள் இரு மடங்கு ஆக்கினால் நான் நாள்தோறும்கூட வருவேன் என்று பேசினாராம்! என்னே அவர்தம் இனப் பற்று!
ஒருமுறை 1934இல் ஒரு ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்ட காந்தியார், ஹெட்கேவரிடம் உங்கள் அமைப்பின் சட்டத் திட்டங்களை எனக்குக் காட்டு வீர்களா எனக்கேட்டபோது, எங்களுடைய அமைப்பிற்கு எழுதப்பட்ட சட்ட திட்டங்கள் ஏதும் கிடையாது (No written constitution) என்று பதில் அளித்துள்ளார்.
இன்றைய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, பண்டாரி, நானா தேஷ்முக், பால்தாக்ரே, (சிவசேனைத் தலைவர்) எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே!
ஹெட்கேவாருக்குப்பின் தலைமைப் பொறுப்பை 1940இல் ஏற்ற மாதவ சதா சிவ கோல்வால்கர் அவர்களைப்பற்றி R.S.Sஇன் கதை என்ற நூலில் (இக்கட்டுரையின் பல தகவல்கள் இந்நூலிலிருந்தே தரப்பட்டுள்ளது) குறிப்பிடுகையில்,
He thought it was ridiculous to describe india as a fand of AHIMSA. Obviously we did not expand into Central Asia and South-East Asia by sarmons alone. He is significant that every Hindu god is armed.
“இந்தியாவை ஒரு அகிம்சைப் பூமி என்று அழைப்பது மிகவும் கேலிக்கூத்தான ஒன்றாகும். மத்திய ஆசியாவிலேயோ, அல்லது தென்கிழக்கு ஆசியாவிலேயோ நாம் நமது ஆதிக்கத்தினைப் பரப்ப வெறும் வாய்மொழி உபதேசத்தினையா நம்பினோம். இல்லையே! தமது இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு இந்துக் கடவுளரின் கையிலும் ஆயுதங்கள் இருக்கின்றன. இந்துக் கடவுள்கள் எல்லாம் ஆயுதப் பாணிகளாக இருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான சுட்டிக்காட்டப்பட வேண்டிய அம்சமாகும்!” என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.
1947லே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவெறிப் போர்க்கோலம் கண்டு பண்டித நேரு போன்றவர்கள் இதை வளர விடுவது ஆபத்து என்று எண்ணினாலும், சர்தார்பட்டேல் போன்றவர்கள் இவர்களுக்கு ஆதரவாளர்களாக இருந்தே வந்தனர்.
காந்தியாரைக் கொலை செய்த
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.
1948இல் பாகிஸ்தானுக்கு சேரவேண்டிய 55 கோடி ரூபாயை அவர்களுக்கு அளிக்க காந்தியார் வற்புறுத்தி உண்ணாவிரதம் இருந்ததை எதிர்த்தனர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்.
கவனிக்கவும் – கவனிக்கவும்
1989ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலரில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது.
“ஆர்.எஸ்.எஸ். நச்சு மரத்தின் வேர் ஒரு பக்கம் பரவி சமுதாயத்தை அழிப்பதற்குள் அதை அடையாளம் காட்டியாக வேண்டும். நமது அரசியல் கட்சித் தலைவர்கள் இதுகுறித்து வாளாயிருந்தால் மத வெறித்தனம் கொடி கட்டிப் பறந்து அரசியல் கட்சிகளுக்குப் பதில் மத வெறிக் கட்சிகளே ஆளும் நிலையை அவர்களது வோட்டு வங்கி மூலம் உருவாக்கும் ஆபத்து வரும் என்பதை உணரட்டும்!” என்று தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 1989இல் எச்சரித்தது, நடந்தே விட்டது!
1948இல் காந்தியார் கொலைக்குப் பிறகு 4-2-1948இல் ஆர். எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டவுடன், கோல்வால்கர், பாலாசாகேப் தேவரஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். சில ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
காந்தியார் கொலை வழக்கில் சதி செய்ததாக அந்த இருவரையும் பிடித்தனர். கொலை நடந்த அன்று கோல்வால்கர் சென்னையில் இருந்துகொண்டு அனுதாபச் செய்தி அனுப்பினார்!
காந்தியைக் கொன்றவன் முஸ்லீம் என்று சில இடங்களில் தவறான ஒரு பிரச்சாரத்தினைத் தமிழ்நாட்டில் கிளப்பி விட்டனர். தந்தை பெரியார் அவர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது!
கோட்சே, மராத்திப் பார்ப்பனர் என்ற தகவல் அறிந்த நிலையில் மாரத்திப் பகுதிப் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். அக்கிரகாரங்கள் சூறையாடப்பட்டன.
எரிமலை வெடித்துக் கிளம்பும் என்று எதிர்பாராத கோல்வால்கர் (இதற்குமுன் வீரம் பேசியவர்) உடனே ஆர்.எஸ்.எஸ். அமைப்புக் கலைக்கப்படுவதாகப் பிரகடனம் செய்தார்.
நேருவின் கோபம்!
உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் போக்குக் குறித்து பிரதமர் நேருவுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. குற்றவாளிக்குப் பின்னால் உள்ள சதியாளர்கள் சதி வேலைகளையும் சரிவரக் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை அவருக்கே சுட்டிக்காட்டி எழுதினார்!
1948ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அன்று உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
“While the investigation about Bapu’s assassination by Godse is proceeding here and (in) Bombay and elsewhere, there appears to be a certain lack of real effort in tracing the larger conspiracy. More and more I have come to the conclusion that Bapu’s murder was not an isolated business but a part of a much wider campaign organised chiefly by the RSS. A large number of RSS men have been arrested, probably many of them more or less innocent. But a considerable number of their key men are still abroad or under-ground or even sometimes flourishing in the open. Many of these people are in our offices and in the police. It is hardly possibie to keep anything secret from their group. I was told the other day by a responsible police officer that no search could be conducted in secret because previous intimation always reached the parties concerned.
“The Delhi police has apparently a good number of sympathisers with the RSS. It may not be easy to deal with all of them. But I think something more than has been done can be undertaken. I have little doubt that the RSS organisation is still fairly active in many ways and will hit back when it can.”
இதன் மொழி பெயர்ப்பு :
கோட்சேயினால் பாபு கொலையுண்டது பற்றிய புலனாய்வு இங்கேயும் (டில்லி) பம்பாயிலும் பிற இடங்களிலும் நடந்து கொண்டிருக்கையில், இன்னும் அதிக அளவிலான சதியைத் துப்பறிந்து கண்டுபிடிப்பதில் உண்மையான முயற்சி போதாது என்று தோன்றுகிறது. பாபுவின் கொலையென்பது ஏதோவொரு தனிமைப்படுத்தப் பெற்ற செயல் அல்ல, அது முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்.ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னும் விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியே எனும் முடிவுக்கே நான் மேலும் மேலும் வந்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெருமளவு எண்ணிக்கையுள்ள மனிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கிட்டத்தட்ட ஒன்றும் அறியாதவர்களே. ஆனால், அதனை இயக்குகின்ற முக்கிய மனிதர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இன்னும் வெளிநாடுகளிலோ, தலைமறைவாகவோ உள்ளனர். அல்லது சில சமயங்களில் வெளிப்படையில் செழிப்பாய் வளர்ந்து கொண்டு வருகின்றனர். இவர்களில் பலர் நம்முடைய அலுவலகங்களிலும், காவல் துறையிலும் இருக்கிறார்கள்.
ஒரு நாள் ஒரு பொறுப்புள்ள காவல்துறை அதிகாரி என்னிடம், இரகசியமாக இவர்களிடையே எந்தத் தேடல். நடவடிக்கையும் செய்ய முடியாது; காரணம் அது பற்றிய செய்தி சம்பந்தப்பட்டவர்கட்கு முன்கூட்டியே சேர்ந்துவிடுகிறது.
டில்லி காவல் துறையில் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் நல்ல எண்ணிக்கையில் உள்ளனர் என்பது வெளிப்படை. அனைவர் மீதும் நடவடிக்கையெடுத்துச் சமாளிப்பது எளிதாயிராது. ஆனால், ஏற்கெனவே செய்யப்பட்டிருப்பதைக் காட்டிலும் இன்னும் ஏதேனும் அதிகமாக மேற்கொள்ளப்பட முடியுமென நினைக்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்பதிலும் இனியும் முடியும்போது திருப்பித் தாக்கும் என்பதிலும் எனக்கு அய்யமில்லை.
ஆர்.எஸ்.எஸ். தடை நீக்கத்திற்காக சென்னையில் அட்வகேட் ஜெனரலாக இருந்த டி.ஆர்.வெங்கட்ரமண சாஸ்திரிதான் நேருவிடமும் மத்திய அரசிடமும் தூது சென்றார்.
எச்.வி.ஆர். அய்யங்காரின் கடிதம்!
அப்போது உள்துறை செயலாளராக இருந்த எச்.வி.ஆர்.அய்யங்கார், சிறையிலிருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில் (1949ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி) also objected to a nominated Sar-Sangha- Chalak and alleged that many important offices in Sangha were held by “Persons belonging to a particular community from on a certain area”, meaning Maharashtrian Brahmins.
ஆர்.எஸ்.எஸ். தலைவரை நியமனம் செய்யும் முறை பற்றியும், அந்த அமைப்பில் உள்ள பெரும்பாலான பதவிகளைப் பெற்றுள்ளோர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் – அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே உள்ள அந்த ஜாதியினர் என்பது வெளிப்படை என்று குறிப்பிட்டதன்மூலம் மராத்தியப் பார்ப்பனர்களே அப் பதவிகளை வகிக்கும் நிலையும் வாய்ப்பும் அந்த அமைப்பில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு பாசிச இயக்கம் அல்ல என்பதற்கு டி.ஆர். வெங்கட்டரமண சாஸ்திரி ஒரு விசித்திர விளக்கம் தந்தார். ஒரு நாட்டின் அரசை பாசீச அரசு என்று சொல்லமுடியும். ஆனால். ஒரு தனிப்பட்ட அமைப்பை பாசீச அமைப்பு என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் அதில் சேருமாறு எவரையும் எவரும் வற்புறுத்த முடியாது அல்லவா?
மொழி பற்றிய ஆர்.எஸ்.எஸ். கொள்கை!
ஆர்.எஸ்.எஸ். என்ற இந்த அமைப்புக்கு மற்றொரு நோக்கம் ‘இந்து அரசாங்கத்தினை அமைப்போம்!’ என்ற முழக்கத்தின் மீது ஆரிய வர்ணாசிரம தர்மத்திற்குப் புது மெருகு கொடுத்து வலிவும் பொலிவும் கொள்ளச்செய்வது. அதற்காக சமஸ்கிருதத்தினையும் இந்தியையும் பரப்புவது என்பதாகும்!
தொடர்பு மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்று 1957இல் கோல்வால்கர் கூறியுள்ளார்!
“மேல்படிப்பு, ஆராய்ச்சி எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஒரு பொது மொழி உண்டு என்றால் அது சமஸ்கிருதமேயாகும்! அதன் புனிதத் தொடர்பும், சிறப்பான வளமும்(!) அதுவே தமது தேசிய மொழி என்பதற்கு தகுதியானதாகும். நாட்டின் ஒற்றுமைக்கு சமஸ்கிருதம் என்பது ஒரு கட்டாயம் ஆகும். ‘Sanskrit is a must for national unity.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் மொழிக் கொள்கை. இதைவிட ஆபத்தான நிலை தமிழர்கட்கு வேறு உண்டா? செத்த மொழிக்கு சிம்மாசனம் தேடுவதே இவர்களது நோக்கம் ஆகும்!
மிக முக்கியமான பிரச்சினை இன்றைக்கு என்ன வென்றால் குடும்பக் கட்டுப்பாடு. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்ன?
(“On the subject of artificial population control. Shri Gurji felt that there was need for it.)
ஆரிய வர்த்தம் என்பது அகண்ட பாரதம் என்பதுஎன்ன?
கோல்வால்கரின் கூற்றைக் கேளுங்கள்.
Afghanistan may be considered to be logically a part of Bharat. For Vedic Aryans. Afghanistan was the very centre of their culture. Tha Kauravas mother Gandhari, came from Gandhar i.e. modern Quandhar. The Puranas include all Himalayan territories including Tibet and Baluchistan upto the southern seas, into Bharat. Even ‘Iran’ is ‘Aryan’. Its last dynasty the Pehlavis laid greater stora by Aryanism than even by Islam. Zend Avesta is semi-Rig Veda, Burma is only ancient Brahmadesha. Mahabharat refers to Irrawat (elephant) i.e. modern Irrawady Valley, as being involved in the Great War. Two thousand years ago we had 6 states. The story or Parvati’s 51 organs falling in such distant parts as Baluchistan and Bangladesh only emphasies this unity of the country.”
When asked whether the ‘Arya factor” will not irritate some friends in the south, he said: ‘The present argument of Aryan vs. Dravidian is very recent, and very artificial.
“தர்க்க முறையாக ஆஃப்கானிஸ்தான் நாடு பாரதத்தினுடைய ஒரு பகுதியாகவே கருதப்படலாம். வேதகால ஆரியர்கட்கு ஆஃப்கானிஸ்தான் அவர்களின் கலாச்சார மய்யமாகும். நவீன கவுரவர்களின் க்வாந்தார் எனறழைக்கப்படுகின்ற காந்தாரத்திலிருந்துதான் கவுரவர்களின் அன்னை காந்தாரி வந்தார்,. புராணங்கள் திபெத், பலுசிஸ்தானம் ஆகியன சேர்ந்து இமாலயப் பகுதிகளையும் தென் கடல்கள் வரையிலான பகுதிகளையும் பாரத தேசத்துடன் இணைத்துக் காட்டின. ஈரான் என்பது கூட ஆரியச் சார்புடையதுதான். ஈரானின் கடைசி அரச வம்சமாகிய பெஹ்லாவியர்கள் இஸ்லாம் மதத்தைக் காட்டிலும் ஆரிய சமயத்தையே உயர்வாகக் கருதி மகிழ்ந்திருந்தனர். ஸெண்ட் அவெஸ்தா என்பது பாதி ரிக்வேதம் அதன் மாபெரும் போரில் அய்ராவதம் (யானை) ஈடுபட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறது. அதுவே இன்றைய அய்ரா வழிப் பள்ளத்தாக்காகும். 2000 ஆண்டுகளுக்கு முன் நாம் 56 தேசங்களைப் பெற்றிருந்தோம். பார்வதயின் 51 அங்கங்கள் பலுச்சிஸ்தானம், வங்காளதேசம் போன்ற தொலை தேசங்களில் விழுந்ததாகக் கூறப்படும்.அது இந்த நாட்டினுடைய ஒற்றுமையைத்தான் வலியுறுத்தும்.
ஆரியன் எனும் அம்சம் தென்னாட்டிலுள்ள சில நண்பர்கட்கு எரிச்சல் ஊட்டாதா என்று கேட்கப் பட்டபோது அவர், “இன்றைய ஆரிய திராவிட விவாதம் மிகவும் சமீப காலத்தியதும் மிகவும் செயற்கையானதும் ஆகும்.”
மாநிலங்களே கூடாதாம்!
மாநிலங்கள் என்பவைகளுக்குத் தனி சட்டசபை முதல்வர் இருக்காமல் டில்லி மத்திய ஆட்சியின் கீழ் உள்ள பிரதேசங்களாகத்தான் இந்திய அரசியல் அமைப்பு (Unitary State) ஒரே குடைக்குள் இருக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகும். அவரது “Bunch of Thoughts” என்ற நூலில் இதை விளக்கியுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பு நாடகம் போடும் இவர்கள் குலதர்மம், வர்ணதர்மத்திற்கு எதிராகப் பேசமாட்டார்கள்.
இடஒதுக்கீடு பற்றிய கொள்கை
ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தும் இட (Reservation Policy) கொள்கை மூலம்தான் சமூக நீதி அடைய முடியும் என்ப சிலும் நம்பிக்கையில்லாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
மிஞ்சினால், பார்ப்பனர் சங்கம் கூறும் பொருளாதார அடிப்படை (மேல்ஜாதி ஆதிக்கவாதிகளுக்கு அதுதான் வசதியான ஏற்பாடு என்பதால்) வற்புறுத்தக் கூடும்.
இவர்கள் ‘சிசுசங்கம்’ என்ற குழந்தைகள் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ஏ.பி.வி.பி. என்பது என்ன?
அகில பாரதீய வித்தியர்த்தி பரிஷத்’ (A B V P) என்ற பெயரில் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் திரட்டி (வடபுலத்தில் 1947 முதல் இது துவக்கப்பெற்றது) அவர்களை விட்டு அரசியல் நிர்ணய சபைக்கு மனுக்கொடுக்க வைத்தனர்.
1. இந்தியாவுக்கு “பாரத்” என்ற பெயர் சூட்டவேண்டும்.
2. இந்தி மொழியை ஆட்சி மொழியாக்கவேண்டும்.
3. ‘வந்தே மாதரம்’ பாட்டைத் தேசிய கீதமாக்க வேண்டும்.
இதில் இரண்டு அம்சங்கள் அரசியல் சட்டத்தில் (பெரும்பாலும் பார்ப்பனர்களாக அரசியல் வரைவுக் குழுவினர் இருந்ததால்) மிகவும் சாமர்த்தியமாகப் புகுத்தி வெற்றி கண்டு விட்டனர்.
அதேபோன்று “விசுவ இந்து பரிஷத்” என்ற V.H.P. என்ற அமைப்பின் மூலம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை இன்று பரப்பி வருகின்றனர்.
இது ஒரு புதுப்பெயரில் 1979இல் (’விசுவ இந்து சம்மேளனம்’ என்று 29 நாடுகளிலிருந்து பிரதிநிதிகளை அழைத்து ஆர்.எஸ். எஸ். கொள்கைகளை நடத்தினர்.
சமுதாய சேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் பற்பல நாடுகளிலும் பரப்புவதே இதன் வேலையாகும். அதேபோல தொழிலாளர்களிடையே பாரதீய மஸ்தூர் சங்கம் B.M.S. தென்காடி (Thengadi) என்பவரைப் பொறுப்பாக்கி நடத்தி வருகின்றனர். I.N.T.U.C.யில் நாகபூரில் பணிபுரிந்து இவர்களுக்கென ஒரு தொழிற்சங்கக் கிளையை இப்படி தொடங்கியுள்ளனர்!
அரசியலிலும் ஆபத்து !ஆபத்து!!
இந்த நச்சுமரத்தின் வேர் ஒரு பக்கம் பரவி, சமுதாயத்தை அழிப்பதற்குள் அதை அடையாளம் காட்டி அழித்தாக வேண்டும்!
நமது அரசியல் ஆட்சித் தலைவர்கள் இது குறித்து வாளா இருந்தால் மதவெறித்தனம் கொடி கட்டிப் பறந்து அரசியல் கட்சிகளுக்குப் பதில் மதவெறிக் கட்சிகளே ஆளும் நிலையை அவர்களது வோட்டு வங்கி (Vote banks) மூலம் உருவாக்கும் ஆபத்து வரும் என்பதை உணரட்டும்!
வடநாட்டில் ராமஜென்மபூமி- மதக் கலவரத்திற்கு கால்கோள் விழாவல்லாமல் வேறு என்ன?