இவருக்கொரு
வணக்கம்
செய்வோம்!
இவர் மட்டும்தானே
ஈரோட்டு ஏந்தலின்
கைத்தடியை
கடைசிவரை
பற்றியவர்!
இவருக்கொரு
நன்றி கூறுவோம்!
இவர்தானே
எந்தைப் பெரியாரின்
இறுதி மூச்சுக்குப்
பின்னும்
இன்றுவரை – ஏன்
நாளைக்கும்
இயக்கப் புரவியை
ஈடில்லா வேகத்தில்
செலுத்தும் வீரர்!
திராவிட சிந்தனையின்
பகுத்தறிவாளர்
‘விடுதலை‘ ஏட்டின்
இரத்த நாளம்
விடாது விடுதலை
அவரை நாளும்
மாசிலா சுற்றுச்
சூழலின் காற்று
சமூக நீதியின்
மூல ஊற்று!
முழு மூச்சையும்
பெரியாருக்கே
ஈந்த
இரசாயனக்
கூட்டு!
பெரியார் உலகம்
என்னும் அலைகள்
சிறகடித்துப்
பறக்கின்றன
அவர்தம்
சிந்தனை வானில்!
தொட்டதை அவர்
விட்டதில்லை
வெற்றி காணாமல்
ஓய்வதும் இல்லை
வெல்வார் வீரமணி
ஒலிப்பார் வெற்றி மணி!
வாழட்டும் அவர்
வையத்து
நாட்களெல்லாம்!
– கவிஞர் கலி.பூங்குன்றன் –