புதுடில்லி, நவ.30 உலக அளவில் நடக்கும் குழந்தை திருமணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடை பெறுகிறது என்று சமீபத்தில் அய்.நா. வெளியிட்ட அறிக் கையை சுட்டிக்காட்டி குழந்தை திருமணமுறையை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணா நிதி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கேட்டிருப்பது பின்வருமாறு: கடந்த மூன்று ஆண்டுகளில் குழந்தை திரு மணத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக் கையை மாநில வாரியாக, மாவட்ட வாரியாக கணக்கெடுக்க வேண்டும். கிராமப் புறங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்திருக்கும் புதிய முயற்சிகளின் விவரங்களை மாநிலம் வாரியாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் குறித்த எண்ணிக்கை விவரம்.
பன்னாட்டு சட்டங்களான பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடு களையும் நீக்குவதற்கான கூட்டமைப்பின் (CEDAW) அறிவுறத்தலின்படி சிறார்களின் நிச்சயதார்த்தங்களை சட்டப்படி குற்றம் என அரசு அறிவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!
திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்
புதுடில்லி, நவ.30 பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இந்திய- சீன எல்லைகளில் இரு நாடுகளும் தங்களது படைகளை விலக்கிக் கொள்ள ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் விவரங்களை ஒன்றிய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும் எல்லை ஒப்பந்தம் குறித்து சீன அரசாங்கத்திடம் இருந்து முறையான அறிக்கை வந்துள்ளதா என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற் கும் இடையில் விசா வழங்குவதற்கான விதிகளை எளிதாக்கும் வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் எனவும் இன்று மக்களவையில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கேட்டுள்ளார்.