டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறுத்துங்கள், பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.வணிக ரீதியாக சுரங்கம் தோண்டும் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது, கார்கே காட்டம்.
நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்; அதானி,சம்பல் பிரச்சினைகளை பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
சம்பல் மசூதி விவகாரம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உ.பி நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
உள்துறை, நிதி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் பொறுப்புகளைக் கேட்டுள்ளதாகவும், இவை வழங்கப்படாவிட்டால், கட்சி வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவளிக்கும் என்றும் பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே நிபந்தனை விதித்திருப்பதாக தகவல்.
தி இந்து:
இரண்டாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி கவலை அளிக்கும் வகையில் 7 காலாண்டுகளில் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் அய்ந்தாண்டு காலாண்டில் 6.7% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி ஜூலை மற்றும் செப்டம்பர் இடையே 5.4% ஆக சரிந்தது;
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
நீதிமன்றங்களில் 5,600க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இரண்டு இடங்களும், உயர் நீதிமன்றங்களில் 364 இடங்களும், மாநிலங்கள் முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் 5,245 இடங்களும் காலியாக உள்ளன சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில்.
– குடந்தை கருணா