உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
புதுடில்லி, நவ.30- கடன் அதிகரிப்பு, விளைச்சல் தேக்கம், போதிய சந்தை நடைமுறை இல்லாதது, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை விவசாயிகள் சந்தித்து வருவதாக உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விளைச்சல் பாதிப்பு காரணமாக கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 1995-ஆம் ஆண்டுமுதல் 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விளைபொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒன்றிய அரசு தங்களின் கோரிக் கைகளை ஏற்காததைத் தொடா்ந்து, டில்லி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்த கிசான் மோா்ச்சா மற்றும் கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய சங்கங்கள் கடந்த பிப்ர வரியில் அழைப்பு விடுத்தன. அந்த அழைப்பை ஏற்று டில்லி செல்லும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் மேற்கொண்டனா். அவா்களைத் தடுத்து நிறுத்தும்விதமாக அம்பாலா – டில்லி தேசிய நெடுஞ்சாலையில் டில்லியின் எல்லைப் பகுதியில் தற்காலிக தடுப்புகளை அரியானா அரசு ஏற்படுத்தி, காவல்துறையினரும் குவிக்கப்பட்டனா்.
இதை எதிா்த்து விவசாயிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், டில்லி எல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற பஞ்சாப்-அரியானா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அரியானா அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகள் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து ஆராயவும், போராட்டத்தைத் தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கவும் பஞ்சாப்-அரியானா உயா்நீதிமன்ற மேனாள் நீதிபதி நவாப் சிங் தலைமையில் ஓய்வுபெற்ற அய்பிஎஸ் அதிகாரி பி.எஸ்.சாந்து, மொஹாலியைச் சோ்ந்த தேவிந்தா் சா்மா, பேராசிரியா் ரஞ்ஜித் சிங் குமன், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வேளாண் பொருளாதார நிபுணா் சுக்பால் சிங் ஆகியோா் கொண்ட உயா்நிலைக் குழுவை கடந்த செப். 2-ஆம் தேதி அமைத்தது.
இடைக்கால அறிக்கை
இந்தக் குழு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் தனது 11 பக்க இடைக்கால அறிக்கையை 22.11.2024 அன்று தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:
பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளாக கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. பசுமைப் புரட்சி மூலம் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஆரம்பத்தில் உயா் லாபம் பெற்ற விவசாயிகள் அதன் பிறகு 1990-ஆம் ஆண்டு மத்திய பகுதி முதல் கடுமையான பயிா் மற்றும் உற்பத்தி தேக்கத்தை சந்திக்கத் தொடங்கினா். அதன் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மொத்த விளைச்சல் குறைந்தது, உற்பத்தி விலை உயா்வு, விளைபொருள்களுக்கு போதிய சந்தை நடைமுறை இல்லாதது, உரங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலைவாசி உயா்வு, விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனா்.
விவசாயிகள் மீதான கடனும் பன்மடங்காக உயா்ந்துள்ளது. இதில், சிறு மற்றும் நலிந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வேளாண் மாறும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபாா்டு) புள்ளிவிவரங்களின்படி 2022-23-இல் பஞ்சாப் விவசாயிகள் பெற்ற கடன் ரூ. 73,673 கோடியாகவும், அரியானா விவசாயிகள் பெற்ற கடன் ரூ. 76,630 கோடியாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. அதுபோல, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தின்படி, வங்கிகள் மூலம் அல்லாத வகையில் விவசாயிகள் பெற்ற கடனைப் பொறுத்தவரை, பஞ்சாப் விவசாயிகளின் கடன் நிலுவை 21.3 சதவீதமாகவும், அரி யானா விவசாயிகளின் கடன் நிலுவை 32 சதவீதமாகவும் இருப்பது தெரியவுந்துள்ளது.
பரிந்துரைகள்
விவசாயிகளின் நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். குறிப் பாக, விவசாயிகள் சந்தித்து வரும் நெருக்கடிகள், கடன் சுமை அதிகரிப் புக்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்வது அவசியம். இது, அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான நம்பிக்கையை மறுகட்டமைப்பு செய்ய உதவும்.
விவசாயிகளுக்கு நேரடி வருவாய்க் கான ஆதரவு, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட நடைமுறைகள் மூலம் வேளாண் துறையை லாபகரமானதாக மாற்றுவது குறித்து ஆராய்வது அவசியம்.
முக்கியமாக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் அளிக்க சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியம் உள்ளிட்ட 11 விவகாரங்களை உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யவேண்டும் என தனது இடைக்கால அறிக்கையில் உயா்நிலைக் குழு குறிப்பிட்டுள்ளது.
4 லட்சம் விவசாயிகள் தற்கொலை
கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 1995-ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தேசிய குற்ற ஆவணப் பதிவு (என்சிஆா்பி) விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாபில் 3 அரசுப் பல்கலைக் கழகங்கள் சாா்பில் வீடு வீடாக நடத் தப்பட்ட கள ஆய்வில், கடந்த 2000 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் மட்டும் 16,606 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவா்களில் பெரும்பாலானோா் சிறு மற்றும் நலிந்த விவசாயிகள் என்பதும், அதிக கடன் சுமையே இதற்கு முக்கியக் காரணம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்று உயா்நிலைக் குழு குறிப்பிட்டுள்ளது.