தா.பழூர், நவ.29- அரியலூர் கழக மாவட்டம் தா.பழூர்ஒன்றியம் உதயநத்தம் சிவசாமி அவர்களின் மனைவியும் நினைவில் வாழும் சி.வீரமணி நலமுடன் வாழும் தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரனின் தாயாருமான கோவிந்தம்மாள் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்ச்சி 24.11.2024 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. அனைவரையும் த.சிவமணி வரவேற்றார். படத்திறப்பு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையேற்று உரையாற்றினார்.
பொதுக்குழுஉறுப்பினர் ராஜா அசோகன், மாவட்டத் துணைத் தலைவர் இரா. திலீபன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறித்தும், உடற்கொடை வழங்கிய அம்மையாரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.
பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், கழகப் பேச்சாளர் வட லூர் புலவர் இராவணன் மாவட்ட செய லாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி, மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன், தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் இரங்க லுரையாற்றினர். தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ்சேகரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் இரத்தின. ராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர் செயலாளர் ஆ இளவழகன் , மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ. இளவரசன், செயலாளர் மா.கரு ணாநிதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ.தமிழரசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், தா. பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், சூரியநாராயணன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்த மிழ் செல்வன், செந்துறை தா.மதியழகன், சுப்புராயன், சுந்தரவடிவேல், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செயலாளர் த.செந்தில், ஆட்டோ தர்மா, வடலூர் இந்திரஜித், ஜெயங்கொண்டம் நகர தலைவர் துரை.பிரபாகரன், செயலாளர் கே.எம்.சேகர், ஆயுதகளம் ரங்கராஜன் கிருஷ்ணமூர்த்தி, மீன்சு ருட்டி ஆ.சேக்கிழார், வீராக்கன் தென்றல், ஆ.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.