திருவண்ணாமலை, நவ.29- கீழ்பென்னாத்தூரில் பெண் சாமியார் அன்ன பூரணி தனது உதவியாளரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமண காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் பெண் சாமியார் அன்னபூரணி. இவர் தனியார் தொலைகாட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியவர் ஆவார். ராஜாதோப்பில் அன்னபூரணி கட்டிய ஆசிரமத்தில் அவருடைய உருவத்தை கடவுள்சிலைபோன்று அமைத்துள்ளார். மேலும் கும்பாபிஷேகத்தின் போது அன்னபூரணி அம்மன் வேடத்தில் காட்சியளித்தார்.
அப்போது பக்தர்கள் அனைவரும் அவருக்கு பாத பூஜை செய்து வணங்கி சூடம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆன்மிகசொற்பொழிவு, அருளாசி வழங்கி வருகிறார். அன்னபூரணி கடந்த நவம்பர் மாதம், தான் 3ஆவதுதிருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த நிலையில் ராஜாதோப்பில் உள்ள அவருடைய ஆசிரமத்தில் அன்னபூரணிக்கும்,அவருடைய உதவியாளர் ரோகித் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அன்னபூரணியும், ரோகித்தும் மணக்கோலத்தில் மேடைக்கு வந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க ரோகித், அன்னபூரணியின் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் பக்தர்கள் வரிசையாக நின்று மணக்கோலத் தில் இருந்த அன்னபூரணியிடம் ஆசி பெற்றனர். திருமண நிகழ்ச்சியில் குறைவான நபர்களே கலந்து கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறையின ரிடம் கேட்டபோது, ‘பெண் சாமி யார் அன்னபூரணி ராஜா தோப்பில் உள்ள அவரது ஆசிரமத்தில் வைத்து 3ஆவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு ஏற்கெ னவே 2 முறை திருமணம் ஆனதாக கூறப்படுகிறது. அதன் நிலை தெரிய வில்லை. அவர் 3ஆவது திருமணம் செய்தது தொடர்பாக எவ்வித புகாரும் வரவில்லை’ என்றனர்.
பெண் சாமியார் அன்னபூரணி தனது உதவியாளர் ரோகித்தை 3ஆவது திருமணம் செய்து கொண்ட காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.