மசூதிகளை தோண்டி பார்ப்பது தான் அன்றாட பணியா? தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நீதிமன்றம் தாக்கீது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, நவ.29 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீா் தா்கா, சிவன் கோயில் மீது கட்டப்பட்டுள்ளதால் அதைக் கோயிலாக மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தா்கா குழு, ஒன்றிய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறைக்கு விசாரணை நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அஜ்மீா் தா்காவின் கண்காணிப்புக் குழு செயலாளர் சையத் சா்வார் சிஸ்தி நேற்று (28.11.2024) கூறுகையில்,
‘சமூக நல்லிணக்கத்துக்குப் பெயா் பெற்று அனைத்து மதத்தினரும் நேரில் வந்து வழிபடும் தலமாக உள்ள அஜ்மீா் தா்காவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் நிர்வாகப் பொறுப்பு ஒன்றிய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின்கீழ் உள்ளது.

இதில் இந்திய தொல்லியல் துறைக்குப் பங்கில்லை. பாபா் மசூதி வழக்கின் தீா்ப்புக்குப் பிறகு பல்வேறு மசூதிகளுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இந்த வழக்கில் எங்களையும் ஒருதரப்பாக சோ்க்க வேண்டும்’ என்றார்.
இந்த மனுவை விஷ்ணு குப்தா என்பவா் கடந்த செப்டம்பா் மாதம் தாக்கல் செய்தார். இதன் அடுத்தகட்ட விசாரணை டிச.20-இல் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் இருந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் நான்கு போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *