சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தைத் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திறந்து வைத்தார். கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ‘சுயமரியாதைச் சுடரொளிகள் இணைய தளத்தை’ (www.suyamariyathaisudaroligal.com) தொடங்கி வைத்து, அதற்கான QR code-யும் திறந்து வைத்தார். தி.மு.க. செய்தித் தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் QR code-அய் Scan செய்து இணையதளத்தைப் பயன்படுத்திப் பார்த்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி–10’ என்ற நூலை திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார். ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்’ என்ற புத்தகத்தை கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வெளியிட்டார். கழகத் தோழர்கள் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர்.
திராவிடர் கழகத்தின் இலட்சியக் கொடியை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தமிழர் தலைவருக்கு ஈரோட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.