அன்பார்ந்த திராவிடர் கழக மகளிர் அணி,திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர் தோழர்களுக்கும், திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்களுக்கும், ஓர் அன்பான வேண்டுகோள்
வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி அன்று போற்றுதலுக்கு உரிய நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 92 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். தமிழர் தலைவரின் பிறந்தநாள் பரிசாக மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்க உள்ளோம்.
அந்த அடிப்படையில் மகளிர் அணி , மகளிர் பாசறை தோழர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்த அளவு 30 பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்கினால் மிகுந்த சிறப்பாக இருக்கும். தமிழர் தலைவர் அவர்கள் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார். ஆர் எஸ் எஸ் என்னும் பேரபாயம் கொண்ட இந்துத்துவ தத்துவத்தின் ,அரசியல் வடிவமாய், பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்காக பார்ப்பனர்களைக் கொண்டு நடத்தப் பெறும் பார்ப்பன அரசாங்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா அரசு.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் விழுங்கி ஏப்பம் விட காத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பெரியார் பெருந்தொண்டர்கள் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என அனைத்து பட்டாளங்களும் களத்தில் இறங்க வேண்டிய ஒரு வரலாற்று நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நம் வீட்டு இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை, நான்காம் தலைமுறை, அய்ந்தாம் தலைமுறை என அனைத்து பெரியார் பிஞ்சுகளையும், சிறுவர் சிறுமியர் பட்டாளங்களையும், திராவிடமயமாக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் கட்டாயம்.
பெரியார் பிஞ்சு மாத இதழ், நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு பகுத்தறிவு உணர்வை ஊட்டுவதோடு அல்லாமல், ஆங்கில வழியில் படிக்கும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு, தமிழ் மொழி பயிற்சி அளிக்கிற இதழாகவும் விளங்கும். ஆண்டு சந்தா ரூபாய் 600. திராவிடர் கழகத் தோழர்கள் விடுதலை இதழ் சந்தா சேகரிப்பு பணிகள் இருக்கின்ற சூழலில்,அவர்கள் செல்லாத இடங்களில் மகளிர் அணி மகளிர் பாசறை தோழர்கள் பெரியார் பிஞ்சு சந்தாக்களை சேர்க்கலாம் ..
இது போன்ற வாய்ப்புகள் குறைவாக இருக்கின்ற மாவட்டங்களில், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்களும், திராவிடர் கழக மாவட்ட தலைவர்களும் மகளிர் அணி ,மகளிர் பாசறை தோழர்களுக்கு தங்களால் முடிந்த வரையில் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லா மாவட்டங்களில் இருந்தும், சேகரிக்கப்படும் பெரியார் பிஞ்சு சந்தாக்கள், டிசம்பர் 2ஆம் தேதி அன்று மாவட்ட வாரியாக தமிழர் தலைவரிடம் வழங்கப்படும் ..
சந்தா கட்டி முகவரி அனுப்புகின்ற தோழர்களுக்கு, அந்த முகவரிக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் அஞ்சலில் முறையாக வந்து சேரும் வரை நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சந்தா கட்டிய விவரங்களையும் முகவரிகளையும் ,எங்கள் whatsapp எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என்னுடைய whatsapp எண்.9486101676.
அனைவருக்கும் இனிய தமிழர் தலைவர் பிறந்தநாள் வாழ்த்துகள்.
– தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் அணி செயலாளர், 9486101676