நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்திக்கு பேரவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியவாறு நாடாளுமன்ற உறுப்பினராக பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.