பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 448ஆவது வார நிகழ்வு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் 23.11.2024 அன்று மாலை 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவர் பூ.இராமலிங்கம் முன்னிலையில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளின்படி சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு ” சமூக நீதி மாளிகை ” என பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் நாடு அரசை பாசறை வலியுறுத்துகிறது என்ற தீர்மானமும் வயநாடு தொகுதியில் முதல் தேர்தலிலேயே 4,10, 931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தையொட்டி சிவகுமார், அருமை நாதன், பிச்சை மணி, வழக்குரைஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில் அரவிந்தன், எஸ்.கார்த்தி, அருள் விழியன், புஷ்பா, மணி சுமதி, ஜெயந்தி, கருப்பசாமி, ஆறுமுகம், ஹரிதாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக சசிகுமார் நன்றி கூறினார்.
“சமூக நீதி மாளிகை” பெயர் சூட்டக் கோரி பாசறை சார்பில் சிறப்பு தீர்மானம்

Leave a Comment