ராஞ்சி, நவ.26 ஜார்க்கண்ட் மாநில சட்ட மன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இக்கூட் டணிக்கு 56 இடங்கள் கிடைத்துள்ளன.
23.11.2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த நிலையில், புதிய அரசு பதவியேற்கும் விழா வரும் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் என்று ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் 24.11.2024 தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.முன்னதாக, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதற்காக மாநில ஆளுநரை சந்திக்க சென்றபோது செய்தியாளர்களுடன் பேசிய ஹேமந்த் சோரன், மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நவ. 26-ஆம் தேதி பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பதவியேற்பு விழா 28-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.