வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலமாக பதிவு மூப்பு, வயது வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் 1 : 5 என்ற விகிதாச்சார அளவில் பணி நியமனம் செய்வதே சாலச் சிறந்தது. இதன் மூலம் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கும், வயது முதிர்வு ஆகும் இளைஞர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பிருக்கும்.
நேரடி நியமனம் என்பது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாமலேயே , எந்த வித பதிவு மூப்பு இல்லாமல் உடனே பணி கிடைத்து விடுகிறது. பல ஆண்டுகளாக பதிவு செய்து, பதிவு மூப்பு இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் பணி வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. எனவே நமது திராவிட மாடல் அரசு இதை பரிசீலனை செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் பணி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
– இரா.புகழேந்தி, வேலை வாய்ப்புத் துறை (பணி நிறைவு)
மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், சிவகங்கை.