மீண்டும் மதக்கலவரம்? மசூதியை ஆய்வு செய்கிறார்களாம்!

2 Min Read

சம்பல், நவ.25 உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா்.

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், நிகழ்வு தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 10 போ் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூ தியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நீதிமன்ற உத்தரவில் ஆய்வு: வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த 19.11.2024 அன்று ஆய்வு நடத்தினார்.
இதன் தொடா்ச்சியாக, மசூதியில் 24.11.2024 அன்று காலை 7 மணியளவில் நீதிமன்ற ஆணையா் 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடங்கினார். இதையடுத்து, உள்ளூா் மக்கள் அப்பகுதியில் கூடினா். அப்போது கூட்டத்தில் இருந்து சிலா், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை நோக்கி கற்களை வீசினா். அங்கு நின்றிருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனா்.

துப்பாக்கிச்சூடு: இதைத் தொடா்ந்து, காவலா்கள் கண்ணீா் புகைக் குண்டு களை வீசியும், சிறிய அளவில் தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனா். அப்போது வெடித்த வன்முறையில் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் நயீம், பிலால், நவுமான் ஆகிய 3 போ் உயிரிழந்தனா். சுமார் 20 காவலா்கள் காயமடைந்தனா்.

துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு நிகழ்வு களில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து, கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வன்முறை தொடா்பாக முதல் கட்டமாக 2 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யயப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்று சம்பல் மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர பென்சியா செய்தியாளா்களிடம் கூறினார்.

அகிலேஷ் குற்றச்சாட்டு: உத்தரப் பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் கூறுகையில், ‘சம்பல் மசூதியில் ஆய்வு ஏற்கெனவே நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், போதிய முன்னேற்பாடுகளின்றி மீண்டும் ஆய்வு நடத்தச் சென்றது ஏன்?. ஆய்வுக் குழுவை காலையிலேயே அனுப்பியதன் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, தோ்தல் முறைகேடுகள் குறித்த விவாதங்களை திசைதிருப்பும் பாஜகவின் முயற்சி இது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *