திருச்சி, நவ. 24- திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் நாள் மற்றும் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், 14, 16 மற்றும் 17 வயதிற்குட் பட்ட மாணவர்களுக்கான டேக் வாண்டோ போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இதில், ஆறாம் வகுப்பு மாணவி எஸ்.பூவிதழி, எட்டாம் வகுப்பு மாணவர் எஸ்.ஹரீஸ், எஸ்.அமல் மற்றும் எல்.ஹரிபாலன், ஒன்பதாம் வகுப்பு மாணவி எஸ்.பி.ரிதன்யா, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் எஸ்.தாரிக் அப்துல்லா, ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என்.ஜீவானந்தம், பி.ஷேக் அப்துல்லா ஷா, ஏ.மோனிகா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பகத்கங்களும், ஏழாம் வகுப்பு மாணவி ஏ.தேவாமிகா மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஆர்.யரோஷித் ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கங்களும் பெற்று மகத்தான சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
சாதனை மாணவர்களைப் பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.